இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொங்க வையுங்க எங்க வாழ்வாதாரத்தை

படம்
பொங்கல் பரிசோடு சேர்த்து  மண் பானை, மண் அடுப்பும் இலவசமாக வழக்கோரி  சென்னையில் மண்பாண்ட தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்,     பொங்கல் பொங்க வைக்க மண்பானையும் மண் அடுப்பும் வழங்க வலியுறுத்தி அண்மையில் மண் பாண்டத்தொழிலாளர்கள் முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளித்தனர், இதைத்தொடர்ந்து தங்களது  கோரிக்கையை வலியுறுத்தி மண்பானை மண் அடுப்புடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலரும் மண்பாண்ட தொழிலாளர் வாரியத்தின் முன்னாள் தலைவருமான  சேம.நாராயணன் தலைமை தாங்கினார்,  நூற்றுக்கணக்கானவர்கள்  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு  பொங்கலுக்கு மண் பானையும் அடுப்பும் இலவசமாக கொடு என்று முழக்கமிட்டனர், கொரோனா நோய்ப்பரவலில்  காணாமல் போயிருக்கும் தங்களது வாழ்வாதாரம் செழிக்க மண் பானையும் மண் அடுப்பையும் வழங்கி தங்களது வாழ்க்கையையும் பொங்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்,, 

பரிசு மழை பொழிந்த அமைச்சர்

படம்
சென்னையில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜெயகுமார் மாணவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு பரிசு மழையும் பாராட்டு மழையும் பொழிந்தார் நான்காவது தமிழ் தெரியுமா ? சென்னை ராயபுரம் செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் மாணவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு பரிசு மழை பொழிந்தார்,. மூன்று தமிழ் என்னென்ன என்று மாணவர்களிடம் கேட்டார் அதற்கு இயல் இசை நாடகம் என்று பதிலளித்த மாணவர்களுக்கு ஐநூறு ரூபாய் பரிசளித்தார், அதைத்தொடர்ந்து நான்காவது தமிழ் என்ன என்று கேட்டார், உடனே ஒரு மாணவன் மேடைக்கு ஒடி வந்து அறிவியல் தமிழ் என்று பதிலளித்த சரியான விடை சொன்ன மாணவனுக்கு சபாஷ் போட்ட அமைச்சர் ஜெயகுமார் அந்த மாணவனுக்கு ஐநுாறு ரூபாயை அள்ளிக்கொடுத்தார்.மேலும் அந்த ,மாணவனிடம் எனக்கு பிடித்தது அவனது தைரியம் என்று கூறி கேள்வி கேட்டதுமே தயங்காமல் மேடைக்கு வந்து பதில் சொன்ன  அந்த மாணவனின்   தைரியம் தான் எனக்கு ரொம்பவும் கவர்ந்தது, எ

முதலமைச்சர் வேட்பாளர் : பாமக முடிவு என்ன

படம்
முதல்வர் வேட்பாளர் யார் பாமக முடிவு என்ன  முதலமைச்சர்  வேட்பாளர் யார்  என்பது குறித்து  ராமதாஸ் அறிவிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,  வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்தது, அப்போது செய்தியாளர்களை சந்தித்த . பாமக தலைவர் ஜி.கே.மணி  அளித்த பேட்டி: இன்னும் 2 மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. . ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது.தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளர்  யார்  என்பது குறித்து  பாமக நிறுவனர்  ராமதாஸ் அறிவிப்பார்.என்றார் அவர்,  ஏற்கனவே பிஜேபி தரப்பில்  முதல்வர் வேட்பாளர் குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அக்கட்சியின் தேசிய செயலாளர் சி.டி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான

கனிமொழியை கட்டம் கட்ட திட்டம்

  கனிமொழியை கட்டம் கட்ட ஸ்டாலின் திட்டம்: அமைச்சர் ஜெயகுமார் தகவல்  இது குறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டி  ட  முதல்வர் இபிஎஸ்    யார் . சாதாரண   விவசாயி . நான்   யார் ?   டாட்டா   பிர்லா பரம்பரையா ?  காசிமேட்டில்   பிறந்தவன் .  எம்ஜிஆர் ஜெவின்    விசுவாசியாகி   கொடி   பிடித்து   வளர்ந்தவன் . அந்த   அதிமுக    கொடி   பிடித்த காரணத்தினால்   இன்று   தேசியக்   கொடியுடன்   வலம்   வர   முடிகிறது . கொடி   கட்டும் நபருக்குதான்   அதிமுகவில்    மரியாதை . திமுகவில்   வாரிசுகளுக்குதான்   மரியாதை . உதயநிதிக்கு   முக்கியத்துவம்   அளிக்கிறார்கள் . அவர்   கட்சியில்   ஸ்டாலின்   ஒரு உத்தரவு   போடுகிறார் . தற்போது   திமுக   தலைவர் , அதற்கு   அவரின்   தந்தை கருணாநிதி    படம் , பெரியார் , அண்ணா படத்தைப் போடுங்கள்   என்று   தெரிவித்துள்ளார் . இது   எல்லோருக்கும்தானே பொருந்தும் . அதில்   உதயநிதி   படத்தைப்   போடலாமா . அவருக்கு   மட்டும்   ஏன் விதிவிலக்கு . இது   யாருக்கு   வைக்கும்   செக் . துரைமுருகன் , பொன்முடி , கனி மொழி ஆகியோரின்   படத்தைப்   போடக்கூடாது   என்றால்   இது   முழுக்க   முழுக்க   கனிமொழ

ராயபுரத்தில் குக்கர் ஊர்வலம்

படம்
👈   ராயபுரத்தில் குக்கர் ஊர்வலம்  அமமுகவின் குக்கர் ஊர்வலம் சென்னை ராயபுரம் எம்.சி.ரோட்டில் நேற்று நடைபெற்றது, அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் , குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமமுக பொதுசெயலாளர் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றார், புதிய சின்னமான குக்கரை அறிமுகப்படுத்தும் ஊர்வலம் ராயபுரம் எம்.சி.ரோட்டில்   நேற்று காலை நடைபெற்றது, துணை பொதுசெயலாளர் செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் வடசென்னை கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் ராயபுரம் ராமஜெயம், மீனவர் அணி மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மகளிர்   அணி செயலாளர் எழிலரசி, மாவட்ட அமமுக இணை செயலாளர் மதிவதனா, ராயபுரம் பகுதி அமமுக செயலாளர் வர்மா உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர், இந்த ஊர்வலத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் குக்கரை தலையில் சுமந்து சென்றனர்,  

சினிமாவில் ஹீரோ அரசியலில் ஜீரோ

  நடிப்பில் ஹீரோ அரசியலில்  ஜீரோ என்று  நடிகர் கமல்ஹாசன் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை சந்திக்கும் போது  நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரசாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த விடை   தமிழ்நாட்டைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? 70 வயது வரை நடித்துவிட்டு, ரிடையரான காலத்தில் அரசியல் தொடங்கியுள்ளார். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்கலாம். நான் 1974-இல் அரசியலுக்கு வந்தேன். 46 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன். 1989-ல் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளேன். அவர் நடிப்பில் வேண்டுமானால் பெரியவராக இருக்கலாம், அரசியலில் ஜீரோ தான் என்றார், நடிகர் விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னை  சந்தித்தது குறித்து .எழுந்த கேள்விக்கு முதலமைச்சர் விடையளிக்கையில்   திரையரங்குகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. திரையரங்கங்கள் முழுமையாக திறப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்

கண்ணீர் கடலில் கரையோர கிராமங்கள்,

கடந்த 2004 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 26 ம்தேதி  சுமித்ரா தீவில் எழுந்த சுனாமி பேரலைகள் உலகத்தையே புரட்டி போட்டது கிட்டதட்ட இலங்கையின் தமிழர் பகுதிகள் அழிந்து போயின, தமிழகத்தில்  உலகின் மிக நீண்ட பட்டினம்பாக்கம், சென்னை மெரினா கடற்கரை, திருவொற்றியூர், எண்ணுார் , நாகப்பட்டினம், கடலுார் என்று கடற்கரை பகுதிகள் அனைத்தும் சுனாமி பேரலையின் கோரப்பசிக்கு ஆளாயின,  ஆயிரம் குழந்தைகள் உள்பட 10 ஆயிரம் பேர் தங்களது உயிர்களை இழந்தனர், பலர் தங்களது  குடும்பங்களை அடியோடுஇழந்தனர், கரை மேல் பிறக்க விட்டான், எங்களை கண்ணீரில் மிதக்க விட்டான் என்று பாடலில் கண்ணீரை கரைத்த  மீனவர்கள் மட்டுமில்லாமல் கரையில் விளையாடிய பலரும்  சுனாமிக்கு இரையாயினர்,  சுனாமி பேரலையில் தங்களது சொந்த பந்தங்களை இழந்த மக்கள், இன்று  கடலில் பால் ஊற்றி குடும்பம் குடும்பமாக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், பெரும்பாலான கடற்கரை கிராமங்கள் கண்ணீரில் நனைந்தன, சுனாமியால் தங்களது பாசத்திற்குரிய மகன், மகள், மக்களை இழந்தவர்கள் அழுது கதறிய காட்சி காண்போர் கண்களிலும்  கண்ணீரை வரவழைத்தது , 

கலைஞர் திமுக உதயமாகிறது,

    அழகிரி கட்சி பெயர் கலைஞர் திமுக  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகனும்  முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வெளியி்ட்டஅறிக்கையொன்றில்   வரும்  3 ம்தேதி மதுரை பாண்டிக்கோவில் அருகே  உள்ள துவாரகா பேலசில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் அனைவரும் பங்கேற்கும் படி அழைத்துள்ளார்,  இந்த கூட்டத்தில் பங்கேறகும்  அனைவரும் முகக்கவசம் அணிந்து வரும்படி அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்,  இந்த ஆலோசனையின் முடிவில்  குறிப்பிட்ட தேதியை சொல்லி அந்த தேதியில் முடிவெடுப்பதாக அழகிரி அறிவிப்பார்,  நீண்ட இழுபறிக்கு பின்னர் கலைஞர் திமுக என்று ஒரு கட்சியை அழகிரி ஆரம்பிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, 

புதிய கிறிஸ்துமஸ் பிரார்த்தனை

  இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது, நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை எல்லா தேவாலயங்களிலும்  விடிய விடிய பிரார்த்தனை குரல்கள் ஒலித்தன.  அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும் .தேவாலயங்களில் பிரார்த்தனை செய்த உதடுகள் உள்ளங்களோடு  கிறிஸ்துமஸ் கொண்டாடும்  அனைவரையும் வாழ்த்துவோம், இந்த ஆண்டு புது புது வகைகளில் பரவும்  உருமாறிய கொரோனா நோய்த்தொற்றை உருத்தெரியாமல் ஆக்குவோம், , கோவிட் தொற்றை     உலகை விட்டே  விரட்டியடிப்போம் புதிய ஆண்டில் புதிய உற்சாகத்துடன் காலடி வைப்போம், என்று கிறிஸ்துமஸ் சபதம் ஏற்போம்,  கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்களுக்கு தலைவர்களின் வாழ்த்துக்கள்  ஓபிஎஸ் - இபிஎஸ் இருப்பவர்கள் இல்லாதோருடன் பகிர்ந்து வாழவும்  ஏற்றத்தாழ்வுகளை களைந்து  எல்லோரும் இறைவனின் பிள்ளைகளாக  அன்பிலும் சமாதானத்திலும் வாழ்ந்திட  உறுதி ஏற்று புத்துலகம் படைப்போம்,  மு.க.ஸ்டாலின்   மகிழ்ச்சிக்குரிய இந்தப் பெருவிழாவினை, கொரோனா கால  பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் கொண்டாடிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் -  எனது கிறிஸ்துமஸ் நல்வாழ

ஜன 3ம்தேதி புதுக்கட்சி மு.க. அழகிரி அறிவிப்பு

புதுக்கட்சி தொடங்குவது குறித்து வரும் 3 ம்தேதி ஆதரவாளர்களுடன் பேசி  முடிவு எடுப்பேன் என முக அழகிரி தெரிவித்துள்ளார் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த  முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது தாய் தயாளு அம்மாவை சந்தித்து பேசினார் ன்இதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய முக அழகிரி வருகிற தேர்தலில் எனது பங்களிப்பு எப்படி இருக்கும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன் தேர்தலில் வேலை பார்ப்பது, தேர்தலில் நிற்பது, தேர்தலில் வாக்களிப்பது என எனது பங்களிப்பு இருக்கும்  ருகிற 3ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது ஆதரவாளர்கள் கருத்து படி நடப்பேன் என தெரிவித்தார்  தனமுகவில் இருந்து இதுவரை எவ்வித அழைப்பும் வரவில்லை கட்சி தொடங்குவது குறித்து 3ஆம் தேதி  தனது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முடிவு ஆதரவாளர்கள் வலியுறுத்தினால் கட்சி   ஆரம்பிப்பேன் என்று அவர்தெரிவித்தார்

சீன வீரர்களை வீழ்த்திய சென்னை பள்ளி மாணவர்கள்

 சதுரங்க போட்டியில் சீன .ரஷ்ய வீரர்களை வீழ்த்தி சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர் உலகளவில் சிறந்த சதுரங்கப் பயிற்சி வீரர்களை இணையவழியில் தேர்ந்தெடுக்கும் 2020ஆம் ஆண்டிற்கான FIDE உலகளாவிய இணையவழிப் பயிற்சி வீரர்கள் மற்றும் இளையோருக்கான விரைவு சதுரங்கப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்றவேலம்மாள் வித்யாலயா, மேல் அயனம்பாக்கம் பள்ளியைச் சேர்ந்த சதுரங்க வீரர்களானடி. குகேஷ் (வகுப்பு IX) மற்றும் ரக்ஷிட்டா ரவி (வகுப்பு X) ஆகியோர் முறையே14-வயதிற்குட்பட்டோருக்கான திறந்த வெளிப் போட்டி மற்றும் 16வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு ஆகியவற்றில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். இப்போட்டியில் ரக்ஷிட்டா ரவி தனது எதிராளியான சீனாவைச் சேர்ந்த சாங் யுக்சினுக்கு எதிராக முழுமையான புள்ளிகளைப் பெற்றும்டி. குகேஷ் தனது எதிராளியான ருஷ்யாவின் இளைய நட்சத்திர வீரர் வாளாடர் முர்ஷினை இறுதிச் சுற்றில் வீழ்த்தியும் உலகளவில் இந்தியக் கொடியினை உயரமாகப் பறக்க வைத்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்தனர்.  நினைவை விட்டு நீங்காத சாதனைகளைப் படைத்த சதுரங்க வீ

26 ம்தேதி முதல் பொங்கல் பரிசுக்கு டோக்கன்

 வரும் 26 ம்தேதி முதல் பொங்கல் பரிசுக்கு டோக்கன்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசாக ரூ 2, 500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ரூ 100 ஆக இருந்த பொங்கல் பரிசு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்  ரூ 2,500 ஆக அதிகரித்துள்ளது, மேலும் ஒரு முழு கரும்பு,சர்க்கரை ஒரு கிலோ, பச்சரிசி  1 கிலோ , உலர் திராட்சை  20 கிராம், முந்திரி 20 கிராம்,, 5 கிராம் ஏலக்காயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,  பொங்கல் பரிசை எப்போது கிடைக்கும், எப்படி கிடைக்கும் என்று மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள், பொங்கல் பரிசுக்கான டோக்கன் வரும் 26 ம்தேதி முதல் வீடு தேடி வரும் என்றும் 30 ம்தேதிக்குள் பொங்கல் பரிசு டோக்கனை நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு தேடி வந்து கொடுப்பார்கள் என்றும்  அதில் பாெருட்கள் வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவையும் அடங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,  ஒரு நாளைக்கு ஒரு தெரு, அதாவது 200 பேருக்கு ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும்  ஜனவரி 4 ம்தேதி முதல