இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றாம் முறையாக களம் காணும் காங் வேட்பாளர்கள்

படம்
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ஆரூண் மகன் அசன் அலி காங்கிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திமுக கூட்டணியில் காங்கிரசு கட்சி போராடி 25 தொகுதிகள் பெற்றது. அந்த 25 தொகுதிகள் பங்கிட்டுவதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் போராட்டம் நடந்தது தனிக்கதை இந்த நிலையில் 21 தொகுதிகளை உழைக்காதவர்களுக்கு கொடுத்து விட்டார்கள். பணத்துக்காக விற்று விட்டார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு சொல்லி அக்கட்சி செயல் தலைவரே சத்தியமூர்த்தி பவனை உண்ணா விரத மேடையாக மாற்றினார்.காங்கிரஸ் சார்பில் கரூரில் வென்ற எம்.பி. எம்எல்ஏ வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடி இருப்பதாக டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார், அதில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பிஜேஎம் ஆரூண் மகன் அசன் அலி அறிவிக்கப்ப்பட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத்தலைவராக இருக்கும் அசன் அலி, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் அம்பத்துார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் இந்த முற

இன்கம்டாக்ஸ் கணக்கு எங்கே

படம்
சட்டபேரவை தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.* தமிழக சட்டசபை தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல், கடந்த 12ம்தேதி துவங்கியது. இத்தேர்தலில் அதிமுகவில் மட்டும் கிட்டதட்ட 8 ஆயிரத்து 241 பேர் விருப்பமனுத்தாக்கல் செய்துள்ளனர், திமுகவில் தொகுதி வாரியாக குறைந்தபட்சம் 25 பேரில் இருந்து 50 பேர் தான் விருப்பமனுக்களை வழங்கியுள்ளனர், அதிமுக திமுக அமமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் அறிிவிக்கப்பட்டுள்ளது, வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஒபிஎஸ் போடி நாய்க்கனுாரி்ல் மனுத்தாக்கல் செய்துள்ளார், இந்நிலையில் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது வழக்கமாக வேட்பாளர்களின் சொத்துக்கள் குடும்பத்தினரின் சொத்துக்கள் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் கேட்கும். இப்போது வருமான வரி கணக்கையையும் கேட்டு தேர்தல் ஆணையம் அலற வைத்திருக்கிறது. , இது குறி்த்து தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கையில் க வே

வடசென்னையில் பிரம்மாண்ட நுாலகம் திமுக வாக்குறுதி

படம்
தென்சென்னையை போல வடசென்னையிலும் பிரம்மாண்டமான நுாலகம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக 11 1 வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது சென்னை/யில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அக்கட்சியின் சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார், இதில் மாநிலத்தின் நலனுக்காக ஒன்றும் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் என இரண்டு தேர்தல் அறிக்கைகளை அவர் வெளியிட்டார், திமுக இத்தேர்தலில் வேட்பாளர்கள் என்பவர்கள் ஒரு கதாநாயகனாகவும் தேர்தல் அறிக்கை மற்றொரு கதாநாயகனாகவும் திகழ்வதாக ஸ்டாலின் தெரிவித்தார் . மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு தனித்தனியாக தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள,. அதில் சென்னை மாநகருக்கு மட்டும் 111 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன, அந்த வாக்குறுதிகளில் சில சென்னை அண்ணா நகர், தண்டையார் பேட்டை அரசு மருத்துவமனைகளும் புளியந்தோப்பு ஆட்டு்த்தொட்டியும் நவீனப்படுத்தப்படும் என்றும் சென்னையில் டோபிகானாக்கள் மேம்படுத்தப்படும் என்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக்கிடங்கு நகருக்கு வெளியே அமைக்கப்படும்

புதுமைப்பெண் விருதுகள் : பெண் போலீஸ் அதிகாரி வழங்கினார்,

படம்
உலக மகளிர் தினத்தையொட்டி வடசென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி புதுமைப்பெண் விருதுகளை வழங்கினார். ராயபுரம் ரவுண்டப்- மெடிக்கல்லி தமிழன் ஆகிய வாட்ஸ் அப் குழுக்களின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியை மங்கையர்க்கரசி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், மாற்றுத்திறனாளிகளான கோமதி, பச்சையம்மாள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்றுநர் ஹெமில்டா ஆகியோருக்கு துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி புதுமைப்பெண் விருதுகளை வழங்கினார். முன்னதாக எழுத்தாளர் லதா சரவணன் தலைமையில் மகளிர் தின விழாவை பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த விழாவில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்த பெண்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையை சேர்ந்த பெண்கள், விழிப்புணர்வூட்டிய பெண் ஊடகவியலாளர்கள், மாநகராட்சி துப்புரவுத்துற

7 வது முறையாக களம் காணும் அமைச்சர் ஜெயகுமார்

படம்
சென்னையில் முதல் தொகுதியாக கருதப்படும் ராயபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளி்டட 6 பேரை ஜாதகம் பார்த்து முதல் பட்டியலை வெளியிட்டுள்ளதுஅதிமுக . அமைச்சர் ஜெயகுமாருக்கு வயது 62 . கடந்த 1991 ஆம் ஆண்டு ராயபுரம் தொகுதி எம்ஜிஆர் இளைஞரணி தலைவராக இருந்த ஜெயகுமார் , முதன்முதலாக அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்றைய சூழ்நிலையில் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி உடல் சிதறி உயிரிழந்தபோது எழுந்த அலையில் அமைச்சர் ஜெயகுமார் மகத்தான வெற்றி பெற்றார், அதன் பின்னர், கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள்,அனைவரும் தோல்வியை சந்தித்தனர் அமைச்சராக இருந்த ஜெயகுமாரும் தோல்வி அடைந்தார், அதன் பின்னர், ஜெயகுமாரின் அரசியல் வாழ்க்கையில் ஏறுமுகம் தான் 2001 , 2006 , 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்த

தாமரை மலர விதை போட்டது அதிமுக

படம்
தமிழகத்தில் தாமரை மலர விதை போட்டது அதிமுக 20 தொகுதிகள் ஒகே: குமரி இடைத்தேர்தலில் ஆதரவு அதிமுக - கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் பாஜ க வுக்கு ஆதரவளிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது அதிமுக -பாஜ இடையே நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று நள்ளிரவு சுமுக உடன்பாடு எட்டப்பட்டது, கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் பாஜ -அதிமுக இடையே நேற்று சென்னையில் நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு காணப்பட்டது சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் கன்னியாகுமரி பார்லிமெண்ட் இடைத்தேர்தலிலும் பாஜ போட்டியிடும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த உடன்பாட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான

எங்கே செல்லும் காங்கிரஸ் பாதை

படம்
காங்கிரஸ் பாதை எங்கே செல்லும். நடிகர் கமல்ஹாசனின் மய்யத்தை நோக்கியா என்று பலரும் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.சீட்டு பேரத்தால் திமுகவுக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிலர், காங்கிரஸின் தனிப்பாதைக்கு சிவப்பு கம்பளம் விரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேலிட பார்வையாளராக அனுப்பி வைக்கப்பட்ட தினேஷ் குண்டுராவிடம் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று புட்டு புட்டு வைத்து விட்டார்கள் . திடீர் பாதை என்பது திகில் பாதையாகிவிடும். அதற்கெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே விதை விதைத்து வளர்த்திருக்கவேண்டும்.தேர்தல் காலத்தில் ராகுல்காந்தி தமிழகத்தை சுற்றி வருவதும் சீட்டுக்காக தனி ஆவர்த்தனம் செய்வதும் காங்கிரசின் இமேஜை தான் காணாமல் போக செய்யும் என்பது தான் அவர்களது கருத்து. இதுவரை ஸ்டாலின் தான் எங்களது முதலமைச்சர் வேட்பாளர் என்று அடித்து சொல்லி விட்டு, திமுகவின் பல்வேறு கருத்துக்களில் உடன்பாடு செய்து விட்டு தேர்தல் சீட்டுக்காக அணி மாறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று தினேஷிடம் விவரமறிந்த காங்கிரசார் விளக்கமாக சொல்லி விட்டார்கள். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ்

செய்தியாளர்கள் புகழும் ஆசிரியர்

படம்
தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. வயதுமூப்பு அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த நாளிதழின் செய்தியாளர்களிடையே அவர் இன்னும் அதே உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்து ராம் கைது செய்யப்பட இருந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசினார். அன்றைய சூழ்நிலையில் அவருடைய கருத்து என்ன என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆம். இந்து பத்திரிகை அலுவலகத்தில் போலீஸாரின் பூட்ஸ் கால்கள் நுழைந்தது தவறு என்று கடுமையாக கண்டித்தார் கிருஷ்ணமூர்த்தி. ஒரு பத்திரிகையின் ஆசிரியர். அந்த பத்திரிகையின் வளர்ச்சியில் தான் முழு நேர கவனத்தையும் செலுத்துவார். கிருஷ்ணமூர்த்தி ஒரு நாணயவியல் ஆய்வாளராகவும் தமிழுக்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கும் தன் கடமையை ஆற்றியுள்ளார். செய்தியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் அவரது பாணி அலாதியானது. பணியாளர்களுக்கு எஜமானனாக அவர் எப்போதும் இருந்ததில்லை. ஒரு செய்தியாளர் இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்த பின்பு புகழ்ந்துரைப்பதில் தான் கிருஷ்ணமூர்த்திய

வீட்டிலிருந்தே வேட்புமனுத் தாக்கல்

படம்
வேட்பாளர்கள் ஆன்லைன் வாயிலாக வீட்டிலிருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்யும் புதிய திட்டம் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அதற்கான மனுவை பூர்த்தி செய்து அதில் இணைக்கப்பட வேண்டிய சொத்து பற்றிய விவரங்கள் வாக்காளர் பட்டியல் நகல் உள்பட பல்வேறு தகவல்களை இணைக்க வேண்டும். இதற்காக வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்குச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் நேரடியாக செல்வதற்குப் பதில் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுவிதா என்ற இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் நேரடியாக தேர்தல் அதிகாரியைச் சந்தித்து அவரிடம் வேட்புமனு தாக்கல் செய்வது போன்று ஆன்லைனில் சுவிதா இணையதளத்தில் கேட்கப்படும் தகவல்களுக்கு பதிலளித்து அதற்கான ஆவணங்களையும் இணைத்து ஆன்லைனில் பதிவு செய்தால் அந்த மனு பரிசீலனைக்கு அனுப்பப்படும். மேலும் அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்தாலும் தேர்தல் அதிகாரியிடம

பகடைக்காயான கமல்ஹாசன்

படம்
தமிழக சட்டமன்றத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம்தேதி நடைபெறுகிறது இதனையொட்டி பல்வேறு கட்சிகள் முண்டா தட்டி களம் இறங்கியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதிமையமும் தேர்தலில் களம் காண்கிறது, கமல்ஹாசனை நிரந்தர தலைவராக அறிவித்து கொண்ட ம.நீ.ம அவரையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது, இந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் , இன்று மாலை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் சென்னை ஆலந்துாரில் இருந்து தொடங்கும் இந்த பிரசாரம் வேளச்சேரி சைதை மற்றம் மயிலாப்பூரில் முடிவடைகிறது, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார். இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை திமுகவில் உள்ள காங்கிரஸ் கட்சி பகடைக்காயாக பயன்படுத்தி சீட்டு பேரம் நடத்தியது. தினகரன் தலைமையிலான அமமுகவும் கமல்ஹாசனுடன் கூட்டணி சேரப்போவதாக கூறி, அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இன்னொரு பக்கம், நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் நடிகர் கமல்ஹாசனுடன் ஆலோசனை நடத்தியது. ஒவ்வொரு கட்சியும் மக்கள் நீதி மையத்துடன் தேர்தல் கூட்டணி அமைப்பதற

கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் பாஜக

படம்
தேர்தல் பேரத்தில் அதிமுகவும் திமுகவும் தீவிரமாக இருக்கின்றன.காங்கிரசுக்கு எவ்வளவு சீட்டு.ராகுல் வைத்த டிமாண்ட் 50 என்று சொல்லப்படுகிறதே உண்மையா என்பது தான் இப்போதைய மில்லின் டாலர் கேள்விகள்.ஆனால் இதுபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் திமுக மனிதநேய மக்கள் கட்சியுடனும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் ஒப்பந்தம் போட்டு கையெழுத்தும் ஆகி விட்டது. இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டு கொடுக்காததால் திமுகவுடன் இருக்கலாமா போகலாமா என்று யோசனை செய்த கட்சி மனிதநேய மக்கள் கட்சி.இப்போது கப்சிப்பாகி விட்டது.அடுத்தது காங்கிரசுடன் 30 இடங்களை பேசி உடன்பாட்டுக்கு வந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுக அணியில் தான் இழுபறி நீடிக்கிறது.தேமுதிக பாமகவுக்கு இணையாக வேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறது.அக்கட்சியின் துணைபொது செயலாளரும் விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷ் நம் முதல்வர நமது சின்னம் என்றெல்லாம் டுவிட்டர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்.அடுத்தது பாஜக முப்பது இடங்களை குறி வைத்து கொண்டிருக்கிறது.அதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்