இடுகைகள்

இலவச லேப்டாப் திட்டம் தொடரும்

படம்
அறிமுகமாகிறார் அதிதி இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் திரையுலகில் நுழைந்திருக்கிறார். முத்தையா இயக்கும் விருமன் என்ற படத்தில் கதாநாயகியஆக அறிமுகமாகிறார் அதிதி சங்கர பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் 2017-18 ம் ஆண்டு பயின்ற பிளஸ் 2;மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி மற்றும் மா. சின்னதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் 2017 -18 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயமுத்தூர், ஈரோடு,காஞ்சிபுரம்,மதுரை, பெரம்பலூர்,சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு இலவச லேப்டாப் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பயின்ற மாணவர்களில் தற்போது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் அத்தாட்சி அடிப்படையில் லேப் டாப் வழங்குவதற்கு அரசாணை பிறபிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2020-

மூன்றாம் முறையாக களம் காணும் காங் வேட்பாளர்கள்

படம்
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ஆரூண் மகன் அசன் அலி காங்கிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திமுக கூட்டணியில் காங்கிரசு கட்சி போராடி 25 தொகுதிகள் பெற்றது. அந்த 25 தொகுதிகள் பங்கிட்டுவதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் போராட்டம் நடந்தது தனிக்கதை இந்த நிலையில் 21 தொகுதிகளை உழைக்காதவர்களுக்கு கொடுத்து விட்டார்கள். பணத்துக்காக விற்று விட்டார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு சொல்லி அக்கட்சி செயல் தலைவரே சத்தியமூர்த்தி பவனை உண்ணா விரத மேடையாக மாற்றினார்.காங்கிரஸ் சார்பில் கரூரில் வென்ற எம்.பி. எம்எல்ஏ வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடி இருப்பதாக டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார், அதில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பிஜேஎம் ஆரூண் மகன் அசன் அலி அறிவிக்கப்ப்பட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத்தலைவராக இருக்கும் அசன் அலி, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் அம்பத்துார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் இந்த முற

இன்கம்டாக்ஸ் கணக்கு எங்கே

படம்
சட்டபேரவை தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.* தமிழக சட்டசபை தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல், கடந்த 12ம்தேதி துவங்கியது. இத்தேர்தலில் அதிமுகவில் மட்டும் கிட்டதட்ட 8 ஆயிரத்து 241 பேர் விருப்பமனுத்தாக்கல் செய்துள்ளனர், திமுகவில் தொகுதி வாரியாக குறைந்தபட்சம் 25 பேரில் இருந்து 50 பேர் தான் விருப்பமனுக்களை வழங்கியுள்ளனர், அதிமுக திமுக அமமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் அறிிவிக்கப்பட்டுள்ளது, வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஒபிஎஸ் போடி நாய்க்கனுாரி்ல் மனுத்தாக்கல் செய்துள்ளார், இந்நிலையில் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது வழக்கமாக வேட்பாளர்களின் சொத்துக்கள் குடும்பத்தினரின் சொத்துக்கள் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் கேட்கும். இப்போது வருமான வரி கணக்கையையும் கேட்டு தேர்தல் ஆணையம் அலற வைத்திருக்கிறது. , இது குறி்த்து தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கையில் க வே

வடசென்னையில் பிரம்மாண்ட நுாலகம் திமுக வாக்குறுதி

படம்
தென்சென்னையை போல வடசென்னையிலும் பிரம்மாண்டமான நுாலகம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக 11 1 வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது சென்னை/யில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அக்கட்சியின் சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார், இதில் மாநிலத்தின் நலனுக்காக ஒன்றும் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் என இரண்டு தேர்தல் அறிக்கைகளை அவர் வெளியிட்டார், திமுக இத்தேர்தலில் வேட்பாளர்கள் என்பவர்கள் ஒரு கதாநாயகனாகவும் தேர்தல் அறிக்கை மற்றொரு கதாநாயகனாகவும் திகழ்வதாக ஸ்டாலின் தெரிவித்தார் . மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு தனித்தனியாக தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள,. அதில் சென்னை மாநகருக்கு மட்டும் 111 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன, அந்த வாக்குறுதிகளில் சில சென்னை அண்ணா நகர், தண்டையார் பேட்டை அரசு மருத்துவமனைகளும் புளியந்தோப்பு ஆட்டு்த்தொட்டியும் நவீனப்படுத்தப்படும் என்றும் சென்னையில் டோபிகானாக்கள் மேம்படுத்தப்படும் என்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக்கிடங்கு நகருக்கு வெளியே அமைக்கப்படும்

புதுமைப்பெண் விருதுகள் : பெண் போலீஸ் அதிகாரி வழங்கினார்,

படம்
உலக மகளிர் தினத்தையொட்டி வடசென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி புதுமைப்பெண் விருதுகளை வழங்கினார். ராயபுரம் ரவுண்டப்- மெடிக்கல்லி தமிழன் ஆகிய வாட்ஸ் அப் குழுக்களின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியை மங்கையர்க்கரசி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், மாற்றுத்திறனாளிகளான கோமதி, பச்சையம்மாள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்றுநர் ஹெமில்டா ஆகியோருக்கு துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி புதுமைப்பெண் விருதுகளை வழங்கினார். முன்னதாக எழுத்தாளர் லதா சரவணன் தலைமையில் மகளிர் தின விழாவை பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த விழாவில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்த பெண்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையை சேர்ந்த பெண்கள், விழிப்புணர்வூட்டிய பெண் ஊடகவியலாளர்கள், மாநகராட்சி துப்புரவுத்துற

7 வது முறையாக களம் காணும் அமைச்சர் ஜெயகுமார்

படம்
சென்னையில் முதல் தொகுதியாக கருதப்படும் ராயபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளி்டட 6 பேரை ஜாதகம் பார்த்து முதல் பட்டியலை வெளியிட்டுள்ளதுஅதிமுக . அமைச்சர் ஜெயகுமாருக்கு வயது 62 . கடந்த 1991 ஆம் ஆண்டு ராயபுரம் தொகுதி எம்ஜிஆர் இளைஞரணி தலைவராக இருந்த ஜெயகுமார் , முதன்முதலாக அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்றைய சூழ்நிலையில் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி உடல் சிதறி உயிரிழந்தபோது எழுந்த அலையில் அமைச்சர் ஜெயகுமார் மகத்தான வெற்றி பெற்றார், அதன் பின்னர், கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள்,அனைவரும் தோல்வியை சந்தித்தனர் அமைச்சராக இருந்த ஜெயகுமாரும் தோல்வி அடைந்தார், அதன் பின்னர், ஜெயகுமாரின் அரசியல் வாழ்க்கையில் ஏறுமுகம் தான் 2001 , 2006 , 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்த

தாமரை மலர விதை போட்டது அதிமுக

படம்
தமிழகத்தில் தாமரை மலர விதை போட்டது அதிமுக 20 தொகுதிகள் ஒகே: குமரி இடைத்தேர்தலில் ஆதரவு அதிமுக - கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் பாஜ க வுக்கு ஆதரவளிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது அதிமுக -பாஜ இடையே நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று நள்ளிரவு சுமுக உடன்பாடு எட்டப்பட்டது, கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் பாஜ -அதிமுக இடையே நேற்று சென்னையில் நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு காணப்பட்டது சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் கன்னியாகுமரி பார்லிமெண்ட் இடைத்தேர்தலிலும் பாஜ போட்டியிடும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த உடன்பாட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான