மூன்றாம் முறையாக களம் காணும் காங் வேட்பாளர்கள்

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ஆரூண் மகன் அசன் அலி காங்கிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திமுக கூட்டணியில் காங்கிரசு கட்சி போராடி 25 தொகுதிகள் பெற்றது. அந்த 25 தொகுதிகள் பங்கிட்டுவதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் போராட்டம் நடந்தது தனிக்கதை இந்த நிலையில் 21 தொகுதிகளை உழைக்காதவர்களுக்கு கொடுத்து விட்டார்கள். பணத்துக்காக விற்று விட்டார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு சொல்லி அக்கட்சி செயல் தலைவரே சத்தியமூர்த்தி பவனை உண்ணா விரத மேடையாக மாற்றினார்.காங்கிரஸ் சார்பில் கரூரில் வென்ற எம்.பி. எம்எல்ஏ வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடி இருப்பதாக டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார், அதில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பிஜேஎம் ஆரூண் மகன் அசன் அலி அறிவிக்கப்ப்பட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத்தலைவராக இருக்கும் அசன் அலி, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் அம்பத்துார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் இந்த முறை அடிபட்ட புலியாக வேளச்சேரியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் போட்டியாளர்களிடையே வெற்றி பெற்றவர், வேளச்சேரி தொகுதியில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே போல் சட்டமன்றத்திலும் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு போராடி, போராடி வெற்றி பெறும் விஜயதரணி விளவங்கோடு தொகுதியில் மூன்றாம் முறையாக களம் காண்கிறார். இவருக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது, போராளிகளை மீறி விளவங்கோட்டில் விஜயதரணிக்கு சீட் கிடைத்திருக்கிறது. குளச்சல் தொகுதியில் பிரின்ஸ்க்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மூன்றாம் முறையாக போட்டியிடும் வேட்பாளர், இந்த முறை ஜெயிக்கமுடியுமா தேர்தல் முடிவுகள் தான் பதில் சொல்ல வேண்டும் மயிலாடுதுறையில் வேட்பாளராக ராஜகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார் இவர் ஏற்கனவே , திருவல்லிக்கேணியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியர் தற்போது மீண்டும் மயிலாடுதுறையில் காங்கிரல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சசிகலா எந்த டீம்