இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாஸ்ட்ரோ இளையராஜாவுக்கு அஸ்திவாரம்

படம்
ஐ.மா.பா என்ற இலக்கிய உலகிலும் இடதுசாரிகள் வட்டாரத்திலும் கொண்டாடப்டும் மாயாண்டி பாரதி தான் இன்றைய இளையராஜாவுக்கு இசை அஸ்திவாரம் போட்டவர் என்றால் பலருக்கும் வியப்பாக இருக்கும். ஆம் இடதுசாரிகள் மத்தியில் ஒரு காலக்கட்டத்தில் ரொம்ப பிரபலமானவர் பாவலர் வரதராஜன்.இளையராஜாவின் அண்ணனான இவருடைய பாடல்களும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளும். கம்யூனிஸ்ட் இயக்கத்தினரிடையே பிரபலமாவை.தம்பிகளை சேர்த்து இசைக்குழுவை நடத்தினார் பாவலர். அந்த பாவலரை இசைக்குழுவை தொடங்க வித்திட்டவர் மாயாண்டி பாரதி. அது தான் இன்றைய மாஸ்ட்ரோவுக்கும் வழிகாட்டியாய் அமைந்திருக்கிறது இப்போது மாயாண்டி பாரதி பற்றி ஒரு ஃப்ளாஷ்பேக் மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி மாயாண்டி பாரதி தனது வாழ்நாளை 13 ஆண்டுகள் வரை சிறையில் கழித்தவர். ’ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்’ என்ற வார்த்தை ஐ.மாபாவிற்கு பழக்கப்பட்ட வார்த்தை. “ நாங்கள் பள்ளிக்கூடம் போகும்பொழுது தெருவில் வந்தே மாதரம்,பாரத மாதாவுக்கு ஜே! என்று சத்தமாக சொல்லிக்கொண்டு மதுரை வீதிகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக செல்வார்கள். அதை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு பைகளை தூக்கி எறிந்து விட்டு

தலையில் குடுமி : இடுப்பில் பூணுால்

படம்
பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான எட்டாம் வகுப்பு இந்தி பாடநூலில் திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப்படுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப்படுத்தக்கூடாது மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். (குறள் 280, கூடாவொழுக்கம்). பொருள்:உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம். இப்படி கூறிய வள்ளுவரை அதற்கு எதிராக சித்தரிப்பது குரூரமானது! என்று ராமதாஸ் பதிவிட்டுள்ளார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட முகநூல் பதிவு” #CBSE 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்!பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது.ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது.எச்சரிக்கை! என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,

மெட்ரோ ரயில் கட்டண குறைப்புக்கு வரவேற்பு

படம்
சென்னை மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு முதலமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு சென்னை, பிப்- 21- மெட்ரோ ரயில் கட்டண குறைத்து முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்கிறோம், என்று வடசென்னை சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கஜோதி தெரிவித்துள்ளார் இது குறித்து வடசென்னையில் உள்ள சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ராமலிங்கஜோதி வெளியிட்ட அறிக்கை சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் முன்னிலையில் பிரதமர் துவக்கி வைத்தார், வடசென்னைக்கு மெட்ரோ ரயில் வந்தது எங்களுக்கு பெரு மகிழ்வைத்தந்தது, ஐந்து ரூபாய் டாக்டர் என்று எங்களால் அன்பாக அழைக்கப்பட்ட மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் தீர மெட்ரோ ரயில் வரவேண்டும் என்று கனவுகளுடன் போராட்டக்களத்தில் ஈடுபட்டார், அவரது கனவு நிறைவேறியது, ஆனால் வடசென்னையின் பெரும் பகுதி மக்கள் பின்தங்கிய பொருளாதார நிலையில் வாழ்பவர்கள், கூலித்தொழிலாளர்கள், கடலில் அடிக்கடி காணாமல் போகும் மீனவ பெருங்குடிகள், அன்றாடங்காய

5000 அடியாக இருந்தாலும் நீந்தி கரை சேர்ந்து விடுவேன்

படம்
எனக்கு நீந்த தெரியும் . 5000 அடியாக இருந்தாலும் நீந்தி கரை சேர்ந்து விடுவேன் என்று மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார் ராயபுரம் வெக்கா மஹாலில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ராயபுரத்தில் திமுக தான் போட்டியிடும் என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் எனக்கு நீந்த தெரியும் எனவே ஆழம் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. 200 அடியாக இருந்தாலும் 5000 அடியாக இருந்தாலும் நான் நீந்தி கரை சேர்ந்து விடுவேன், ஆனால் திமுகவினர் நானும் குதிக்கிறேன் என்று வந்தால் கடைசியில் கரைக்கு வரும் போது மூச்சு பேச்சு இல்லாமல் தான் வருவார்கள், எங்களை பொறுத்தவரை தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த பல குழுக்கள் அமைத்திருக்கிறார்கள், இந்த நிலையில் நான் போட்டியிடுவேன் என்று சீனியாரிட்டி இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் சொல்லக்கூடாது. கட்சிக்கட்டளையிட்டால் நான் போட்டியிடுவேன் என்று தான் சொல்கிறேன் ஆனால் தொகுதிபங்கீடு குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தொகுதி காங

கடையநல்லுாரில் எடப்பாடி, கோவையில் ஸ்டாலின்

படம்
கடைய நல்லுாரில் முதல்வர், கோவையில் எதிர்க்கட்சித்தலைவர் ]முதலமைச்சரும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று 6 வது கட்டமாக தென்காசி மாவட்டம், கடையநல்லுாரில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார், காலை 9-15 மணிக்கு குற்றாலத்தில் இருந்து கடைய நல்லுார் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடையநல்லுார் பள்ளி வாசல் முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார், அதன் வாசுதேவ நல்லுார் தொகுதியில் உள்ள புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகத்தில் மகளிருடன் கலந்துரையாடல் நடத்துகிறார், இதன் பின்னர் பகல் 12-15 மணிக்கு சங்கரன் கோவில் தொகுதியில் அதிமுகவின் இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார், இதற்கான ஏற்பாடுகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர். சி.ராஜூ மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர், திமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு கோவையின் தேர்தல் ப

2 ஆயிரம் வேலை வாய்ப்புகளை பெற இலவச பயிற்சி

படம்
2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம் இலவசமாக வழங்க போவதாக அறிவித்துள்ளது, , வரும் 21 ம்தேதி முதல் சென்னையில், இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ,தொடங்குகின்றன, ஆதிதிராவிட பழங்குடி மாணவர்கள் மற்றும் பின்தங்கிய மாணவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக இந்த பயிற்சி வகுப்புகளை அம்பேத்கர் கல்வி மையம் இலவசமாக நடத்துகிறது, , தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட ஓராண்டு போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணையில் உத்தேசமாக குருப் 2 தேர்வின் அறிவிப்பு வரும் மே மாதம் வெளிவர இருக்கிறது. அரசின் அறிவிப்பில் தோராயமான காலி பணியிடங்கள் 2ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து அரசின் அறிவிப்பில் இருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி வருகிறது. ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் முதன்மைத் தேர்விற்கும் தயாராகி வருகிறார்கள். குரூப் 2 வில் முதல்நிலை மற்றும் ம

உதயநிதியை விளாசிய முதல்வர்

படம்
என்னுடைய அரசியல் அனுபவம் தான் அவருடைய வயது, அதிமுகவை தாக்கி பேசுவதற்கு எந்த தகுதியம் இல்லை என்று ஸ்டாலின் மகன் உதயநிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளாசித்தள்ளினார் தி்ருநெல்வேலியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இது மக்களுடைய அரசாங்கம்.முதலமைச்சர் என்று நான் எப்போதும் எண்ணியதில்லை. இங்கே அமர்ந்திருக்கின்றீர்களே நீங்கள் தான் முதலமைச்சர், நீங்கள் போடுகின்ற உத்தரவை செயல்படுத்துகின்ற பதவி முதலமைச்சர் பதவி. ஸ்டாலின் அப்படியில்லை, மூன்று மாதத்தில் முதலமைச்சராகி விடுவாராம். எப்படி முடியும்? தேர்தல் அறிவித்து, மக்கள் ஓட்டு போடவேண்டும், எண்ண வேண்டும், பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறவேண்டும், அப்போதுதான் வரமுடியும். முதலமைச்சர் பதவி, கடையில் கிடைக்கும் பொருளா, பொட்டலம் கட்டி வாங்குவதற்கு? மக்களால் தேர்ந்தெடுக்கின்ற பதவி. அதை மறந்து அவர் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களை சந்தித்து, என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்று சொல்கிறோம், இன்னும் என்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்று சொல்கிறோம் மக்கள் அதை நம்புகி

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டை கொண்டாடிய தலைவர்கள்

படம்
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டை கொண்டாடிய தலைவர்கள் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று போற்றப்பட்ட சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 162 வது பிறந்தநாள் விழா தமிழக அரசு சனினர்பில் இன்று கொண்டாடப்பட்டது, இந்த விழாவிற்கு காலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் வந்திருந்தார், அப்போது அவரை, அங்கு வந்திருந்த அதிமுகவின் முன்னாள் எம்.பியும் அமைச்சர் ஜெயகுமாருமான ஜெயவர்த்தன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார், ஜெயவர்த்தன் தவிர டி.கே.ஆரை யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதைத்தொடர்ந்து நடிகை குஷ்பு வந்தார், எல்லா டிவி கேமராக்களும் அவரை பின்தொடர்ந்தன கலெக்டர் ஆபிசுக்கு வந்திருந்தவர்கள் குஷ்புவிடம் மட்டுமல்ல: ஜெயவர்த்தனிடமும் ஆட்டோ கிராப் வாங்கினர், அமைச்சர் ஜெயகுமார் பகல் 11 மணிக்கு வந்தார், டிவி லைவுக்கு ரெடியாக பேட்டியை தொடங்கினார், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் நிலையில் புதுச்சேரியிலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று அதிர்ச்சியில் ஆழ்த்தினார், இந்த நிகழ்ச்ச

திமுக ஓட்டும் எங்களுக்கு தான்

படம்
விவசாயக்கடன் தள்ளுபடியால் திமுக விவசாயிகளும் இரட்டை இலைக்கு தான் வாக்களிப்பார்கள் என்று மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார், சென்னை ராயபுரத்தில் உள்ள தனது சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமார், , புயல் காலத்தில் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான நிவாரணதொகையை வழங்கினார்.இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மக்கள் மனஉணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு அதற்கேற்ப நடந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவோம், .பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து வாட் வரி நேரடியாக மத்திய அரசுக்கு செல்வதால் மத்தியஅரசிடம் இருந்து கெஞ்சி கேட்டு நிதி பெற்று மக்களுக்கு தேவையானவற்றைச்செய்ய வேண்டியுள்ளது. வரியைக் குறைத்தால் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படைகட்டமைப்பு வசதிகள்பாதிக்கப்படும். என்றார், இரண்டாவது கட்டமாக திமுக ஊழல் குற்றச்சாட்டுக்களை கவர்னரிடம் வழங்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்திருப்பது பற்றி அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்

கனவாகி போன மெட்ரோ பயணம்

படம்
வடசென்னையில் வசிக்கும் பின்தங்கிய மக்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் என்று பெரும்பகுதியினர், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் ஆர்வத்திற்கும் விருப்பத்திற்கும் மெட்ரோ ரயில் பயணச்சீட்டு கட்டணம் பெரும் தடையாக இருப்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம், இங்குள்ள தொழிலாளர்கள், பெரும் பகுதி மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்வை கடக்கிறவர்கள், அவர்களின் மாத சம்பளம் என்பது குறைந்த பட்சம் 5 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரையில் தான் இருக்கிறது ஒரு நாளைக்கு 400 ரூபாய் கூலி பெறுபவர்களால் தினந்தோறும் அதிக பட்ச மெட்ரோ ரயில் பயணக்கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள், ஏழை மக்களை பொருத்தவரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது என்பது கனவாக தான் இருக்கிறது, நாட்டின் தலைநகரமான டெல்லி மெட்ரோ ரயிலை அன்றாடம் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள், அதே போன்ற சூழ்நிலையை தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலும் கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை வாழ்மக்கள் எளிதில் செலுத்தும் வகையில் மெட்

23 ம்தேதி சட்டபேரவையில் இடைக்கால பட்ஜெட்

படம்
தமிழக சட்டபேரவை வரும் 23 ம்தேதி மீண்டும் கூடுகிறது, இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார், தமிழக சட்டபேரவை வரும் 23 ம்தேதி காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் கூடுகிறது, இந்த கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார், கடந்த 2ம்தேதி தமிழக சட்டபேரவை கூடியது, புத்தாண்டிற்கான முதற்கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார், இதைத்தொடர்ந்து மறுநாள் 3ம்தேதி மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மற்றும் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,. இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் 4,5 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது, முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களுக்கு பதிலளித்தனர், அப்போது அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தின்போது பதிவு செய்யப்பட்ட சாதாரண வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம

திமுக - 25 ஆயிரம் , அதிமுக- 15 ஆயிரம்

படம்
சட்டமன்றத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ரூ 25 ஆயிரமும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ரூ 15 ஆயிரமும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் விரும்புவோர் தங்தளது விருப்பமனுக்களை ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24ம்தேதி முதல் வழங்கலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் மனுக்களை அறிவிக்கப்பட்ட நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பெற்றுக்கொண்டு விருப்பமனுக்களை வழங்கலாம் என்றும் தமிழ்நாட்டில் சட்டமன்றத்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ 15 ஆயிரமும் புதுச்சேரி மாநிலத்தில் ரூ 5 ஆயிரமும் கேரள மாநிலதத்தில் ரூ 2 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, , இதற்கிடையில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 17ம்தேதி முதல் 24 ம்தேதி வரை விண்ணப்பங்களை வழங்கலாம் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் தமிழகம் மற்றும்

மெட்ரோவுக்கு அஞ்சு ரூபாய் டாக்டர் பெயர் : அமைச்சர் சம்பத் உறுதி,

படம்
வடசென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையமாென்றுக்கு அஞ்சு ரூபா டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் சூட்டுவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதியளித்தார் வடசென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் 9 கிலோ மீட்டர் துார மெட்ரோ ரயில் பயணத்தை பிரதமர் மோடி சென்னையில் கடந்த 14ம்தேதி துவக்கி வைத்தார். இந்த நிலையில் வடசென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பெரிதும் பாடுபட்ட அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை வடசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றிற்கு சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, வடசென்னையில் பத்துக்கும் மேற்பட்ட சமூக நலஅமைப்புகள், சமீபத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தன, இந்த படிவத்தில் ராயபுரம் ரவுண்டப் வாட்ஸ் அப் குழு, தமிழ்நாடு நேதாஜி சமூக சேவை இயக்கம், நண்பர்கள் நகர நல அமைப்பு, வடசென்னை தமிழ் இளைஞர் பேரவை, கருப்பு அம்புகள் விளையாட்டு மற்றும் சேவை மையம், ஆகிய அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன, இதன் தொடர்ச்சியாக வடசென்னை சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் க.ராமலிங்

ஒருவாரத்திற்குள் ரெடியாகணும்

படம்
ஒருவாரத்திற்குள் வண்டலுார் கிளாம் பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையத்தை தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு துணைமுதலமைச்சர் ஓ.Hன்னீர்செல்வம் உத்தரவுிட்டுள்ளார், வண்டலுார் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டார், அப்போது அவர், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கான பணிகளை ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிக்குமாறு: துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார், இந்த ஆய்வின் போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் முனைவர் கார்த்திகேயன், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் சிரு, முன்னாள் எம்.பிக்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கே.என் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 5 ரூபாய் மருத்துவர் பெயர்

படம்
பிரதமரால் துவக்கப்படும் வடசென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அஞ்சுரூபா டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இது குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ராயபுரத்தில் உள்ள 12 சமூக நல அமைப்புகள் கையெழுத்திட்ட அனுப்பிய மனு சென்னை வண்ணாரப்பேட்டை சர்.தியாகராயர் கல்லுாரி அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருப்பது எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகிறோம் இதன் மூலம் எம் பகுதி மக்களின் போக்குவரத்து நெரிசல் தீரும் என்று நம்புகிறோம், இதற்காக வரும் 14 ம்தேதி நடைபெறவிருக்கும் தொடக்க விழாவுக்கும் அந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். வண்ணாரப்பேட்டை தியாகராயர் கல்லுாரிக்கு அருகே அமையவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஐந்து ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் ஜெயசந்திரன் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம், ஏனெனில் அவர் மறைந்த போது , பிரதமர்

ரசிகர் மன்ற தலைவர் வீடு முற்றுகை

படம்
ra விஜய் ரசிகர் மன்றத்தின் மாஜி தலைவர் வீட்டை முற்றுகையிட போவதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அறிவித்துள்ளனர், இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் அளித்த பின்னர் விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்கள் பூக்கடை குமார் மத்தியசென்னை மாவட்டம் தலைவர்,திநகர் க.அப்புனு தென்சென்னை வடக்கு மாவட்டம் தலைவர்,கட்பீஸ் விஜய் வடசென்னை மாவட்டம் தலைவர்,கே.வி தாமு செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது 2011ஆம் ஆண்டு தளபதி விஜயால் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவர் ஜெயசீலன் தற்போது தங்களது இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தற்போதைய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வேண்டுமென்றே பணம் பெற்றுக்கொண்டு பதவி கொடுக்கிறார் என்ற பொய்யான தகவலை கூறி வருகிறார். தற்போதைய காலகட்டத்தில் சினிமா டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் கொடுத்து யார் வாங்குவார்கள் தற்போதைய செயலாளர் மிகவும் நேர்மையாக செயல்படக் கூடியவர் ஆட்டோ ஓட்டுநர் பூ வியாபாரிகள் போன்ற வசதி இல்லாதவர்களையும் மாவட்ட செயலாளர்களாக உருவாக்கி உள்ளார் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இயக்கம் சிறப

மக்கள் பிரதிநிதிகளை தமிழில் பேச வைத்தவர்,

படம்
சென்னை மாநகராட்சி மன்றத்தை தமிழில் பேசவைத்தவர், சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவு நாள் இன்று இதே மாதத்தில் 1860 ஆம் ஆண்டில் பிறந்த சிங்காரவேலர் தான் பல சாதனைகளுக்கு சொந்தகாரர், எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம்,காமராஜர் ஆட்சியின் மதிய உணவு திட்டம் போன்றவற்றிற்கு முன்னோடி யானைக்கவுனியில் சாதாரண சென்னை நகராட்சி கவுன்சிலராக இருந்த சிங்காரவேலர் தான் என்பது ஆச்சர்யமாக இல்லை. அவர் ஜஸ்டிஸ் கட்சி ஆளுமையில் இருந்தபோது தான் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தினார், குழந்தைகளின் மீது அளவற்ற பாசத்தை கொண்டிருந்த சிங்காரவேலர் தனது நகராட்சியில் இருந்த 74 பள்ளிகளை 94 ஆக அதிகரித்தார், தனியாரிடம் இருந்த தனியார் பள்ளிகளை நகராட்சியே ஏற்று நடத்த செய்து இப்போதைய சென்னை பள்ளிகள் உருவாக காரணமும் அவரே . அது மட்டுமல்ல: குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காக்களை ஏற்படுத்தியவரும் சிங்காரவேலர் தான், குழந்தைகளில் பிரம்பால் அடிக்கும் சித்ரவதைக்கு தடை விதித்தவரும் அவரே..எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது தெள்ளத்தமிழில் மாநகராட்சி மன்றத்தில் கவுன்சிலர்கள் பேச காரணமும்

போஜராஜ நகர் இங்கே சுரங்கபாதை எங்கே

படம்
சென்னை சென்ட்ரல் டு டெல்லி சென்னை கடற்கரை கும்மிடிப்பூண்டி மற்றுய் அரக்கோணம் என்று முக்கோண ரயில்தடங்க்ளுக்கு,இடையே ரயில் எப்போ போகும் வீடு போய் சேருவது எப்போ என்று மக்கள் தவிக்கும் பகுதி. சென்னை கொருக்குப்பேட்டை போஜராஜ நகர் அமைச்சர் ஜெயகுமாரின் ராயபுரம் தொகுதியில் அடங்கியிருக்கும் 53வது வட்டத்தில் தான் இந்த போஜராஜ நகர் இருக்கிறது. 2001-2006 ஆண்டு காலத்தில் 53வதுவார்டு கவுன்சிலராக இருந்த செல்வி போஜராஜ நகரில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பினார்.மக்களின் தவிப்புக்கு விடை கிடைக்கவில்லை.இதற்கிடையில் மீண்டும் மாநகராட்சி தேர்தல் வந்தது செல்வியின் கணவர் பாபு சுந்தரம் கவுன்சிலரானார், தன்னுடைய 2006-2011 ஆம் ஆண்டு பதவி காலத்தில் பாபு மாநகராட்சி மன்றத்தில் கோரிக்கை எழுப்பியதோடு அப்போதையகாங்கிரஸ் எம்.பி. ஜே.எம்.ஆருணுடன் டெல்லி சென்று அன்றைய இரயில்வே அமைச்சர்களை சந்தித்தும் வலியுறுத்தினார். இது குறித்து முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் பாபு சுந்தரம் கூறுகையில் போஜராஜ நகரில் மக்களின் தவிப்பிற்கு தீர்வு காண நானும் எனது மனைவியும்

அதிமுகவில் இல்லாதவர் பற்றி ஏன் பேச வேண்டும்: முதலமைச்சர் டென்சன்

படம்
அதிமுகவை கைப்பற்ற சில முயற்சி செய்கிறார்கள் என்று முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி கூறினார், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நடைபெறற் அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் மக்களின் மனதில் தெய்வமாக நிலைபெற்று நிற்பவர்கள் இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள், சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு சதிசெய்து அதிமுக கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு தொண்டனும் எச்சரிக்கையோடு இருந்து கழகத்தை கட்டிக் காக்க வேண்டும். இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கட்சி, ஆட்சி இரண்டையும் உடைக்க முயற்சித்த போது, அதிமுக அரசு ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்து மீண்டும் அ அரசு நிலைநாட்டப்பட்டது. மீண்டும் அவர் புறப்பட்டு விட்டார், அவர் நான்காண்டு காலமாக அலைந்து அலைந்து பார்த்தார், யாரென்று உங்களுக்கே தெரியும், அது டி.டி.வி.தினகரன் பத்தாண்டு காலம் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பின

சின்னம்மாவால் புனிதமடைந்த சென்னை மண்

படம்
பெங்களுரு வில் தான் தங்கியிருந்த சொகுசு விடுதியில்இருந்து சசிகலா நேற்று 7-20 மணிக்கு புறப்பட்டார், அதிமுக கொடி போட்ட காரில் புறப்பட்ட சசிகலாவுக்கு வழியெல்லாம் தியாகத்தலைவி சின்னம்மா வாழ்க என்று கோஷங்கள் எழுப்பி மகத்தான வரவேற்பளித்தனர், எங்கு பார்த்தாலும் அவரது தியாக வாழ்க்கையை நினைவூட்டும் சுவரொட்டிகளும் பேனர்களும் கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன, இளைஞர்களும் இளம் பெண்களும் கூட அவரது தியாகத்தை உணர்த்திருந்தனர் என்பது வரவேற்பில் காணப்பட்ட கண்கொள்ளாகாட்சி. சென்னையில் ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்து சின்னம்மா சசிகலா பயபக்தியுடன் வணங்கினார், அதிகாலையில் மறக்காமல் ராமவரம் தோட்டத்திற்கு வந்த சசிகலா காலையில் சென்னை தி.நகரில் காலடி வைத்து அந்த மண்ணை புனிதமடைய செய்தார், திராவிட இயக்கத்தின் முன்னோடி யான தியாகராயர் பெயரை தாங்கிய அந்த மண் சின்னம்மாவை வணங்கி வரவேற்றது, இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் சின்னம்மாவின் உடல் நலம் குறித்து சிரத்தையோடு நலம் விசாரித்ததாக அமமுக பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்தார், சசிகலா பெங்களுருலிருந்து புறப்பட்டு

சாமானியர்கள் மீதான தாக்குதல்

படம்
சாமானிய மக்களுக்கு எதிராக பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிராக போராடுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அழைப்பு விடுத்துள்ளது இது குறித்து அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் 2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 109 டாலராகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 71 ரூபாயும், டீசல் விலை ரூ. 57/- ஆகவும் இருந்தது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 56 டாலராக குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 90க்கு மேலாகவும், டீசல் விலை ரூ. 83 என்ற அளவிற்கும் உயர்த்தி உள்ளனர். அத்துடன் சமையல் எரிவாயு விலை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட ரூ. 300/-க்கும் மேல் உயர்த்தப்பட்டதுடன், மானியமும் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மீது கடுமையாக தாக்குதல் தொடுக்கும் பாஜக அரசின் இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் சங்கிலித் தொடர் போல அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைக

மார்க்சிஸ்ட் குறி வைக்கும் 12 தொகுதிகள்

படம்
தமிழகத்தில் 12 சட்டமன்ற தொகுதிகளை குறி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது தேர்தல் பிரசாரத்தை வடிவமைத்துள்ளது, வரும் சட்டமன்றத்தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமை உறுதி செய்துள்ளது, இதைத்தொடர்ந்து அக்கட்சியின் அகில இந்திய தலைவர்கள் - சீத்தாராம் யெச்சூரி பிரகாஷ் காரத் பிருந்தாகாரத் ஆகியோர் தமிழகத்தில், வரும் 22,26,27 28 தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர், 1,திண்டுக்கல் , 2,திருப்பூர் , 3,மதுரை 4,திருச்சி,5,கந்தர்வகோட்டை,,6,திருநெல்வேலி, 7,நாகர்கோவில் 8, சிதம்பரம்9, நாகப்பட்டினம் 10,சேலம் மற்றும் 11,தர்மபுரி,12, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகின்றனர், மார்க்சிஸ்ட் கட்சி முன்னுரிமை கொடுக்கும் தொகுதிகளில் கோரிக்கை மாநாடுகள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதி ஏற்கனவே அக்கட்சியின் முக்கிய தலைவர் பாலபாரதி நின்று வென்ற தொகுதியாகும், கேரளத்தின் ஒட்டிய பகுதிகளான உள்ள நாகர்கோவில், திருநெல்வேலி ஆகியவற்றில் அக்கட்சி பரவலான

சசிகலா எந்த டீம்

படம்
சசிகலாவும் டிடிவி தினகரனும் எந்த அணி என்பது குறித்து அமைச்சர் ஜெயகுமார் புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றேதெரியாது. நாங்கள், அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா என வளர்க்கப்பட்டவர்கள். எங்களுக்கு அச்சம் என்பதே தெரியாது. ஈ, கொசுவுக்கு எல்லாம் நாங்கள் அச்சப்படுவதில்லை.அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு அனுமதியில்லை. மீறி பயன்படுத்தினால் சட்டம் தன் கடமையை செய்யும். சசிகலா வருகையால் அவர் சேர்த்து வைத்த சொத்துகளை கொள்ளை அடித்த டிடிவி தினகரன்தான் பதற்றத்தில் உள்ளார்.சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ள வாய்ப்பே இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து நீடிக்கிறோம். டிடிவி தினகரன் கடந்த தேர்தலில் திமுக வின் 'பி' டீமாக செயல்பட்டார்.தற்போதும் திமுக.,வின் ‛பி' டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர்.ஆட்சியை கலைக்க பார்த்தார்கள்.ஆனால் அது நடைபெறாமல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்று வருகிறது .துணை முதலமை

விவசாயிகள் போராட்டத்தை வாழ்த்தி 1லட்சம் தேங்காய்கள்

படம்
டெல்லியில் போராடும் விவசாயிகளை வாழ்த்தி ஒர லட்சம் தேங்காய்களை அனுப்புவோம என்று தமிழக விவசாயிகள் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக் கவுண்டர் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல் மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டரை மாத காலமாக விவசாயிகள் தீரத்துடன் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு மற்ற மாநில விவசாயிகளிடம் ஆதரவு இல்லை என்று சொல்வது தவறான பிரச்சாரம். இந்தியா ஒன்றுபட்டு விவசாயிகளை மட்டுமல்ல விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறது டெல்லியில் நெல்,கோதுமை மற்றும் காய்கறிகள் விளைகின்றன. ஆனால் தேங்காய் விளைச்சல் இல்லை. ஆகவே தமிழக விவசாயிகளின் பங்களிப்பாக தேங்காய் சேகரிப்பை மிக பிரமாண்டமாக நடத்த உள்ளோம்.தமிழக விவசாயிகள் சார்பில் 100 பேர் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சசிகலாவை சந்தித்தால்....,

படம்
சசிகலாவை சந்தி்த்தால் கல்தா பட்டியலில் சேர வேண்டியிருக்கும் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது இந்த கூட்டத்தில், சசிகலாவை சந்தித்தால் அதிமுகவினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அதிமுக செய்தித்தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் கூறியுள்ளார், வரும் 8 ம்தேதி சசிகலா சென்னை வரும் சூழ்நிலையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, இதற்கிடையே அதிமுக அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை துண்டு பிரசுரங்கள், மூலம் மக்களிடம் எடுத்துச் செல்லவும், எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கனவை ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி, வெற்றியை ஈட்டுவோம் என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் சசிகலா வருகை குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் யாருக்கும் எந்த கார

நாஞ்சில் சம்பத் கைதால் பதட்டம்

படம்
நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் திமுகவினர் , சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது கோவை சுந்தராபுரம், குறிச்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிக்காதநிலையில் தடை மீறியதாக நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது நாஞ்சில் சம்பத் கொண்டு செல்லப்பட்ட காவல் துறை வாகனத்தை செல்ல விடாமல் தடுத்து, திமுகவினர் போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சியில் நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்ய வலியுறுத்தி திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. திமுகவினர் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது தான் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு. பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் சிறைச்சாலை எனக்கு சிறகு தயாரிக்கும் இடம். கைது செய்யப்பட்டதற்காக அஞ்சப்போவதில்லை. இந்த ஆட்சியின் ஆயுள் முடியப்போகிறது, அதிமுக ஆட்சி ஆஸ்தமனமாகி சூர

1.6 கோடி பேருக்கு கொரானோ தடுப்பூசி முதலமைச்சர் எடப்பாடி அறிவிப்பு

படம்
1.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி கட்டணமில்லாமல் போடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார் இது குறித்து தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டின்பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் உணர்வுப்பூர்வமாக போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர. இதில் காவலர்கள் மீதான தாக்குதல் , தீ வைப்பு போன்ற சட்டபூர்வமாக திரும்பப்பெற முடியாத ஒரு சில வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளை, சட்ட வல்லுநர்கள்ஆலோசனையைப் பெற்று, எனது தலைமையிலான அரசு திரும்பப்பெறும் என்றார் அதிமுக அரசை நிராகரிக்க திமுக மக்கள் சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றி வருவது பற்றி குறிப்பிட்ட அவர் , நான் செல்லும் இடங்களில் அலைகடலென திரளும் மக்கள் lகூட்டம் இந்த அரசின் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர், இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர் . சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னரும் இதே நிலையே நீடிக்கும், அதிமுக வெற்றி ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்றும் குறிப்பிட்டார், கொரோனா நோய் தடுப்

தமி்ழ்நாட்டில் மார்பக புற்றுநோய் ஆபத்து

படம்
நாட்டிலேயே ஐந்தாவது அதிகபட்ச மார்பக புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையை தமிழகம் பெற்றிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர், - சர்வதேச புற்று நோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது, இது குறித்து "தேசிய புற்றுநோய் பதிவுத்திட்ட அறிக்கை 2020ன் படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 15.6 லட்சமாக அதிகரிக்கும்" என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் கிருஷ்ணகுமார் ரத்னம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “புற்றுநோயில் 200 -க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும். இந்தியாவில் புற்றுநோய் பெரும்பாலும் மார்பகம், வாய், நுரையீரல், வயிறு மற்றும் பெருங்குடல் அல்லது மலக்குடல் ஆகிய பகுதிகளில் தோன்றுவதே அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில், ஆண்கள் மத்தியில், புகையிலைப் பயன்பாடு காரணமாக தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும், பெண்கள் மத்தியில், கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் அதிகம் காணப்படுகின்றன” என்றும் கூறினார் இதனை தடுத்து நிறுத்த “உணவுமுறை, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை புகைபிடித்தல், புகையிலை

50சதவீத ஒதுக்கீட்டுக்கு சட்டசபையில் தீர்மானம்

படம்
மருத்துவ முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையல்50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்து அனைத்த அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக் அளித்த பேட்டி தமிழ் நாட்டில் உள்ள 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தான் கொரானோ நோயின்போது அஞ்சாமல் களத்தில் இறங்கி பாடுபட்டனர் அம்மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியம் இன்னும் வழங்கப்படவே இல்லை.கொரானோவினால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நிவாரண உதவித்தொகையும் இன்னும் வந்து சேரவில்லை.2019 ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய போராட்டத்தின் முன் வைக்கப்ட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பவில்லை என்றார் அவர்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது டாக்டர்கள் அகிலன், ராமலிங்கம் தங்கபிரசன் ஆகியோர் உடனிருந்தனர்

அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து

படம்
-7 898 அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுவதாகவும் 17, 636 பேர் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாணவர்களின் கல்விபாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசுஅலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டைநிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அத்தகையநடவடிக்கைகளில் ஒன்றாக, 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர, சாலை மறியல் போன்றநடவடிக்கைகளில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அவர்கள்அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே போன்று, 2,338 நபர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீளப் பணியமர்த்தப்பட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட