இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரத்த தான சாதனையாளருக்கு ராயல் சல்யூட்

படம்
202 முறை ரத்த தான சாதனை நிகழ்த்திய ராயபுரம் ராஜசேகரனுக்கு கவிஞர் ராமலிங்க ஜோதி தலைமையில் இளைஞர்கள் பெண்கள் ராயல் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர் 202 முறைகளுக்கும் மேலாக ரத்த தானம் செய்து புகழ்ப்பெற்றவர், பி.ஏ.கே.பி.ராஜ்சேகரன், சென்னை கிரேஸ்கார்டனில் வாழ்ந்து பல்வேறு சமூக நல அமைப்புகளுக்கும் சமூக சேவை புரிபவர்களுக்கும் உதவி வந்த அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 1 ம்தேதி காலமானார், அவரதுமறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது, அவரது முதலாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று ராயபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது தமிழக காங்கிரஸ் பொது செயலாளர் கவிஞர் க.ராமலிங்க ஜோதி தலைமையில் , ராஜ்சேகரனின் உருவப்படம் வாகனம் மூலம் , சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் 3 வது சந்தில் இருந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது, கிரேஸ் கார்டன் முதல் பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தை வழக்கறிஞர் கேசிஎஸ்கே பாலாஜி தொடங்கி வைத்தார். முன்னாள் கவுன்சிலர் எம்.கே.பாபு சுந்தரம் முடித்து வைத்தார்.இந்த ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ராஜ்சேகரனுக்கு புகழ் அஞ

ஜெ பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலா

படம்
ஜெயலலிதா பயன்படுத்திய கார் , அதிமுக கொடி கட்டிய சசிகலா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தியகாரில் அதிமுக கொடியை கட்டிக்கொண்டு சசிகலா உற்சாகமாக வந்தார், பெங்களுரு பரப்பன அக்ரகாரம் சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27 ம்தேதி விடுதலையானார், சசிகலா கடந்த 20 ம்தேதி கொரோனா நோய்த்தொற்று காரணமாக பெங்களுரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா இ்ன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார், அவர் அங்கிருந்து சொகுசு விடுதியொன்றுக்கு பயணமானார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தியகாரில் அதிமுக கொடியுடன் சென்றது அக்கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சசிகலா விடுதலையானால் அதிமுகவில் பெரும் பிரளயம் ஏற்படும் என்று பேசப்பட்ட நிலையில் அப்படியொன்றும் நடக்கவில்லை இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்ட போது, சசிகலா இல்லாமல் தான் கட்சியும் ஆட்சியும் நடக்கவேண்டும் என்பது மக்கள் எண்ணம் அதற்கேற்ப அதிமுக ஆட்சியும் கட்சியும் நடக்கிறது, அந்த வகையில் யார் வந்தால் என்ன யார் போனால் என்ன சசிகலாவோடு எந்த இணைப்பும் இல்லை. அதிமுகவில

ஜெயகுமாருக்கு கொரோனா பரிசோதனை

படம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 2 ம்தேதி தமிழக சட்டசபை கூடவிருக்கிறது 2021 ஆம் ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது, கொரோனா நோய்த்தொற்று பரவல் காலம் என்பதால் சென்ற கூட்டம் போலவே கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடைபெறுகிறது, இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் , துணைமுதலமைச்சர் அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள், செய்தியாளர்கள் , அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களாக கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, பேரவை மற்றும் அமைச்சர்களுக்கு உறுப்பினர்களுக்கு ஆங்காங்கே அவர்கள் இருக்கும் இடத்திலேயே நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, சென்னையில் மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச்சீர்திருத்தததுறை அமைச்சர் ஜெயகுமார் கோவிட் 19 பரிசோதனை செய்து கொண்டார், அவர் மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு வருவதாகவும் இந்த முறையும் அவருக்கு நெகட்டிவ் என்று முடிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

94 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 52 257 கோடி முதலீடுகள்

படம்
நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார், தலைமை செயலகத்தில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமையன்று ஆலோசனை நடத்தினார் கொரோனாவைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை அவர் தொடங்கி வைத்து பேசுகையில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகளை விரிவாக விவரித்தார், தமிழகத்தில் இதுவரை 1.58 கோடி பேருக்கு இது வரை ஆர்டி.பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் , இந்த பரிசோதனை மூலம் கொரோனா நோய்த்தொற்று துல்லியமாக கண்டறியப்பட்டு நோய்த்தொற்று பெருமளவில் குறைந்ததாகவும் தெரிகிறது, இந்த பரிசோதனைகள் மேலும் தொடரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார், தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதுவகையான கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிற்கு பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார், மேலும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள

40 தொகுதிகளில் போட்டி: மீனவர்கள் முடிவு

படம்
சட்டமன்றத்தேர்தலில் தாங்கள் பெருமளவில் வாழும் 40 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்த மீனவர்கள் முடிவெடுத்துள்ளன, 2021 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் குறித்து மீனவர் அமைப்புகள் சங்கத்தலைவர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று காலை கலந்துரையாடல் நடத்தினர் இந்த கூட்டத்தில் மீனவர் மக்கள் முன்னணியை சேர்ந்த ரூப்பேஷ்குமார் அகில இந்திய சிங்காரவேலர் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த நைனார்க்குப்பம் பிரபு நெய்தல் தமிழர் கழகத்தை சேர்ந்த ஜாநாக்ஸ் பெர்னான்டோ தமிழ் மீனவர் விடுதலை கூட்டமைப்பு ரஜினி மகி கடல் சார் மக்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பிரவீன்குமார் விடுதலை வேங்கைகள் அமைப்பை சார்ந்த சாரங்கன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர், இந்த கூட்டத்தில்.இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..என்றும் மத்திய அரசு தலையிட்டு இந்திய துாதரகத்தின் மூலம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்கவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது, வருகிற சட்டமன்றத்தேர்

வருகிறார் கூகுள் குட்டப்பன்

படம்
சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த 'தெனாலி' படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' தமிழ் ரீமேக்கை தயாரித்து நடிக்கிறார். 'கூகுள் குட்டப்பன்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், பார்த்திபன் உள்ளிட்ட ப

மாஸ்டரின் புது அவதாரம்

படம்
இன்று முதல் மாஸ்டரின் புது அவதாரம் மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை ப்ரைம் சந்தாதாரர்கள் நாளை\ முதல் காணலாம். இந்தியா மட்டுமில்லாமல் 240 நாடுகளை சேர்ந்தவர்கள் திரைப்படத்தை கண்டு ரசிக்கலாம் \\ தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 29 அன்று பிரத்தியேகமான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ அறிவித்துள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை. இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29, 2021 முதல் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு மக

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மதுரை கும்மி

படம்
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் மதுரையை சேர்ந்த பெண்கள் கும்மியடித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர், மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் கடுங்குளிரிலும் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணி நடத்தினர், தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்திலும் தடை மீறி டிராக்டர் பேரணி நடைபெற்றது, இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மதுரை மாவட்ட நிர்வாகி ராஜலட்சுமி தலைமையில் பெண்களும் இளைஞர்களும் டெல்லி சென்று விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர், இந்த நிலையில் டெல்லி போராட்டத்தில் தமிழகத்தின் கிராமத்து கலாசாரமும் ஒன்றிட தொடங்கியுள்ளது, மதுரையை சேர்ந்த ராஜலட்சுமி தலைமையில் கும்மியடித்து கோஷமிட்டு போராட்டத்தை கலகலக்க செய்து வருகின்றனர், மோடியின் அராஜகத்திற்கு அஞ்ச மாட்டோம். வேளாண் திருத்த தடை சட்டத்தை திரும்ப பெறாமல் டெல்லியில் இருந்து திரும்ப மாட்டோம் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கெஞ்ச மாட்டோம், யாரை கேட்டு விவசாயத்தை அடகு வைத

பேச்சு வார்த்தை நடத்தாததால் வெடித்தது கலவரம்

படம்
மத்திய அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாதது தான் டெல்லி வன்முறைக்கு காரணம் என்று ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கும் கோரிக்கைக்கும் மதிப்பளிக்காமல் உதாசீனம் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாள் கடத்தும் நாடகங்களைத் தான் பா.ஜ.க. அரசு நடத்தியதே தவிர ஆக்கபூர்வமான செயலைச் செய்யவில்லை. இந்திய நாட்டின் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை எதிரிகளாக நினைக்கிறது மத்திய அரசு.பிரதமர், விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஏன் தீர்வு காண முயற்சி செய்யவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள். வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். வன்முறை சூழுமானால் அது ஒன்றே அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகளும் உணர வேண்டும். ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு கா

பத்ம விருது அறிவிப்பு: வருத்தத்தில் வடசென்னை

படம்
பத்மஸ்ரீ ,பத்மபூஷன் விருதுகள் 102 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, விருது பெற்றவர்கள் வாழ்த்த தகுந்தவர்கள் என்றாலும் தமிழகத்தின் பின்தங்கிய பகுதியான வடசென்னை மக்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள், வடசென்னை முழுவதும் இருந்து மக்கள் தங்களுக்கு நோய்நொடி என்றால் ராயபுரத்தில் உள்ள வெங்கடாசல நாய்க்கன் தெருவில் தான் தஞ்சம் அடைவார்கள்,. ஏனென்றால் அங்கே தான் அஞ்சு ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் அன்பான மருத்துவ சேவை கிடைக்கும், அந்த மருத்துவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார், அந்த நாள் முதல் கவலையில் ஆழ்ந்தனர், மக்கள். அந்த கவலையை அந்த பகுதியில் உள்ள பல்வேறு நிகழ்வுகளில் இப்போதும் காணலாம், மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் மூலம் கையெழுத்து இயக்கமும் நடத்தினர், இந்த ஆண்டாவது பத்ம விருது ஜெயச்சந்திரனுக்கு கிடைக்கும் என்று மக்கள் நம்பினர், பிரதமரால் புகழஞ்சலி செலுத்தப்

தமிழகத்திலும் டிராக்டர் பேரணி

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினத்தையொட்டி டில்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது, இந்த பேரணியில் பெரும் கலவரத்தில் முடிந்தது, இந்த நிலையில் தமிழகத்திலும் பல்வேறு டில்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தேசியக்கொடி ஏந்தி பேரணிகள் போராட்டங்கள் நடைபெற்றன, திருவாரூரில் தடையை மீறி டிராக்டர் பேரணி நடைபெற்றது, இந்த பேரணியில் பங்கேற்ற டிராக்டர்களை இரும்பு வேலிகளை போட்டு தடுத்து நிறுத்த போலீசார் முயற்சி மேற்கொண்டனர், டில்லி ஸ்டைலில் இந்த பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது, வழியெல்லாம் கிடந்த இரும்பு வேலிகளை கண்டு அஞ்சாமல், போலீஸ் தடையை மீறி விவசாயிகளின் பேரணி தமிழகத்திலும் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

27 ம்தேதி சசிகலா ரீலிஸ் ஆனால்

படம்
பெங்களூரு பரப்பன அக்ரகாரம் சிறையில் இருந்து வரும் 27 ம்தேதி விடுதலையாவார் என்றும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அ.ம.முக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார் இது குறித்து அ.ம.மு.க. பொதுசெயலாளர் தினகரன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா நாளை (27ம்தேதி ) விடுதலையாகிறார், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர் உடல் நிஸலை தேறி வருவதால் மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களுரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படு்ம என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்,

காங்கிரசுக்கு நெருக்கடி தருகிறதா திமுக - ஜெயகுமார் கேள்வி

படம்
ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் பெற முடியாதபடி திமுக நெருக்கடி கொடுக்கிறதா என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார் இந்தி எதிர்ப்பு போரில் வீரவணக்கம் செலுத்தும் பேரணியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அமைச்சர்களுக்கு எதிராக திமுக போட்டியிட்டால் அதனை களத்தில் சந்திக்க தயார் என்றும் நீந்த தெரிந்தவர்களுக்கு ஆழம் பற்றி கவலையில்லை என்று தெரிவித்தார், மேலும் அமைச்சர்கள் நிற்கும் இடங்களில் எல்லாம் திமுக காங்கிரஸ்க்கு நெருக்கடி தருகிறதா காங்கிரஸ் வாய்மூடி கிடக்கிறதா என்று கேள்வி எழுப்பினார், மேலும் ராயபுரத்தில் போட்டியிட தான் நான் விரும்புவேன் என்று கூறிய அவர், கட்சித்தலைமை தனக்கு வாய்ப்பளிக்கும் என்று கூறினார், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் போல நான் தொகுதி மாற மாட்டேன் என்றும் ராயபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்,

அதிமுக கூட்டணிக்கு கராத்தே ஆதரவு

படம்
அதிமுக கூட்டணிக்கே மக்கள் ஆதரவு இருக்கிறது என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்தார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன் அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார், இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார், கொரோனா நோய்த்தொற்றுக்கிடையிலும் மாவட்டந்தோறும் பயணம் செய்து மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார், எடப்பாடியின் ஆட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது, மீண்டு்ம் அவர் தான் முதலமைச்சராவார் என்று அவர் தெரிவித்தார், மேலும் அவர் கூறுகையில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகலாம், தலைவராகலாம் ஆனால் முதலமைச்சராக முடியாது என்று கூறினார்

கமல்ஹாசன் பி டீம் அல்ல

படம்
நடிகர் கமல்ஹாசன் பாஜகவின் பி டீம் ஏன்று சொல்லப்படுவதிவ் தனக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார் கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23 ம்தேதி முதல் 25 ம்தேதி வரை மூன்று நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறது, இது குறித்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கோவை வந்தார், அங்குள்ள கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பாக அவர் கூறுகையில் மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணி இணைந்துள்ளது. இதில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் தீர்வு காண்போம் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனித்து நின்றால்அது பாஜகவிற்கே சாதகமாக அமையும். எனவே அந்த நிலை ஏற்படக்கூடாது\எனவே கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். மேலும் நடிகர் கமல்ஹாசனால் பாஜவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது அவரது கட்சியை பி டீம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை என்று அழகிரி தெரிவித்தார், கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தை

சட்டமன்றத்தில் வருகிறது வேளாண் தீர்மானம்

படம்
தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர திமுக திட்டமிட்டுள்ளது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 174 அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தை வரும் பிப்ரவரி மாதம் 2 ம்தேதி காலை 11 மணிக்கு கூட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார், புத்தாண்டின் முதல் கூட்டமென்பதால் ஆளுநர் உரை நிகழ்த்துவார், இதைத்தொடர்ந்து பேரவைத்தலைவர் தனபாலின் தலைமையில் பேரவையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும், அந்த கூட்டத்தில் பேரவை கூடும் நாட்கள் குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும், கிட்டதட்ட 4 நாட்கள் வரையும் பேரவை கூடும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே கேரள மாநில சட்டபேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது, அந்த தீர்மானத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆதரவளித்ததாக செய்திகள் வெளியாயின, தமிழ்நாட்டில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை திமுக கொண்டு வருவதற்கான இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாகவும் சசிகலா விடுதலை குறித்தும், ஜெயல

4 வருசம் நான் பட்ட சிரமம்

படம்
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவிதாதார்.இதைத்தொடர்ந்து கடந்த 19ம்தேதி தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் முதற்கடாட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல்வேக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவர் பேசுகையில் நான் பதவியேற்று நான்கு ஆண்டுகளாகி விட்டன இந்த நான்கு ஆண்டுகளில் நான் பட்ட சிரமத்தை எந்த முதலமைச்சரும் அனுபவித்திருக்க மாட்டார்கள் வறட்சி ஒரு பக்கம் தண்ணீர் தட்டுப்பாடு இன்னொருபக்கம். இரண்டையும் திறமையாக சமாளித்தோம் மற்றோரு பக்கம் புயலும் மழையும் புரட்டி போட்யது ஒருவரிடம் இருந்து பலருக்கு.எளிதாக பரவும் கொரானோ வைரஸ் தொற்று நோய்.இததனை எதிர்த்து பத்து மாதங்களாக போராடி கொண்டிருக்கிறோம்.இப்படி நான்கு ஆண்டுகளாக சவால்களை எதிர்கொண்டு தீர்வு கண்டிருக்கிறோம் சவால்களை சந்தித்து சாதனை படைத்திருக்கிறோம் என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

சசிகலாவை சேர்க்கும் எண்ணம் இல்லவே இல்லை,

படம்
சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லவே இல்லை டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டம் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி டெல்லியில் அளித்த பேட்டி . கேள்வி: சசிகலா அதிமுக-வில் சேர மாட்டாரா, அவரை ஏற்றுக்கொள்வீர்களா... பதில்: 100 சதவீதம் கிடையாது. அதிமுகவில் தெளிவாக முடிவு செய்யப்பட்டு, இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. கட்சிக்கு பல பேர் அங்கிருந்து வந்துவிட்டார்கள், அவர் ஒருவர் தான் இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் பார்க்கின்றபோது பெரும்பாலானவர்கள் அங்கிருந்து அதிமுக-வில் சேர்ந்து விட்டார்கள். சிலர் அவருடன் இருக்கிறார்கள். *: அவர் மட்டும் இருக்கிறார் என்கிறீர்கள், அவர் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? அவரையே ஜெயலலிதா பல்லாண்டு காலம் நீக்கி வைத்தார். அவர் இறந்த பிறகுதானே அவருக்கு பதவி கொடுத்திருக்கிறார். ஜெயலலிதா இருக்கும்போது, அவர் கட்சியிலேயே கிடையாது. என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு கோயில் திறப்பு

படம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரை திருமங்கலத்தில் வருவாய் த்துறை அமைச்சர் கட்டியுள்ள ஆலயம் வரும் 30ம்தேதிதிறக்கப்பட உள்ளதுமதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் டி கல்லுப்பட்டி குன்னத்தூரில் முன்னாள் முதல்வர ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.இந்த கோயில் வரும் 30 ம்தேதி திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைப்பார்கள் என்று அமைச்சரும் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளருமான ஆர்பி உதயகுமார் தெரிவித்தார் இந்த விழாவில் தமிழகத்தின் 234தொகுதிகளிலும் உள்ள அதிமுகவின் மூத்த உறுப்பினர்களை அழைத்து கெளரவிக்க இருப்பதாக அவர் கூறினார்.

வண்ணாரப்பேட்டையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்

படம்
வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை வண்ணாரப்பேட்டைக்கு வந்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் காவல் நிலைய வளாகத்தில் காவல் சிறார் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினார், பின்னர் மாட்டு பொங்கலையொட்டி பசு மாட்டுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்கினார், இதைத்தொடர்ந்து சிறுவர்கள் சிறுமியர்களின் சிலம்பாட்டம் கத்தி சண்டை குத்துச்சண்டை, போன்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர கூடுதல் காவல் துறை ஆணையர் அருண், வடக்கு மாவட்ட இணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்,

கண்காணிப்பு வளையத்தில் அமைச்சரகள

படம்
அமைச்சர்களின் பேச்சுக்களை தீவிமாக‌ககண்காணித்து வருவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார், சென்னை ராயபுரத்தில் உள்ள அமைச்சர் ஜெயகுமாரின் சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது, இதில் மீன்வளத்துறை மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார், அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக - அமமுக இடையே உள்ள மோதல் வெறும் அண்ணன் தம்பி சண்டை அதை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்வோம் என்று கூறியிருப்பது பற்றி கேட்கப்பட்டது, அதற்கு விடையளித்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுக - அமமுக இடையே நடப்பது சகோதர யுத்தம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டவர்களை எப்படி அண்ணன் தம்பியாக கருத முடியும், அமைச்சர்கள் கூறிவரும் கருத்துக்கள் குறித்து அதிமுக தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது.ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்து கொண்டு பேசக்கூடாது என்று அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்தார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலா ஒருபெண்

வடசென்னை வாழ்த்து

படம்
ஆர்எம்டி ரவிந்திர ஜெயன் வடசென்னை அதிமுக துணைச்செயலாளர்) உழவர் எடப்பாடியார் ஆட்சி தொடர உலக தமிழர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் க. ராமலிங்க ஜோதி பொது செயலாளர் தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்றோ பொங்கல் திருநாள். பழம் பானைகள் பரண்மேல் விடைபெறும். புதுப் பானைகள் அடுப்பில் இடம் பெறும். பயிர் விளைய உழுத விவசாயிகளுக்கும், உதவிய மாடுகளுக்கும், விளைவித்த மண்ணுக்கும் நன்றி சொல்லும் திருநாளே பொங்கல் பெருநாள். இந்நன்னாளில், எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை குறிப்பாக நான் பிறந்த மண்ணின் மைந்தர்களாம், ராயபுரம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் வடசென்னைமாவட்ட கம்யூ, கட்சி உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் கார்ப்பரேட்டுகள் உண்டு களிக்கும் வேளாண் சட்டங்களுக்கு சமாதி கட்டுவோம் புதிய சரித்திரம் உருவாக்க புது சபதம் ஏற்போம், சி.பி. ராமஜெயம் மாவட்ட செயலாளர் வடசென்னை கிழக்கு மாவட்ட அமமுக தியாகத்தலைவி சின்னம்மாவை தியாகபூமியில் வரவேற்று பொங்கல் படைப்போம் மக்கள் வாழ்வில் புது வசந்தத்தை உருவாக்குவோம். வண்ணை சத்யா

டாட்டா காட்ட மக்கள் தயார்

படம்
தேர்தல் வரும் காரணத்தால் டேட்டா கார்டு கொடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் டாட்டா காட்டி தயாராகி விட்டார்கள் என்று ஸ்டாலின தெரிவித்தார் கொளத்தூரில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் பேசுகையில் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொல்வார்கள். தை பிறக்கப் போகிறது. வழி பிறக்கப் போகிறது. தேர்தல் வருகின்ற காரணத்தால், முதலமைச்சர் பழனிச்சாமி தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. இப்போது டேட்டா கார்டு தரப் போவதாக சொல்லியிருக்கிறார். டேட்டா கார்டு, டேட்டா கார்டு என்று சொல்லும் அவருக்கு டாட்டா காட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். மக்களை ஏமாற்றி அந்தப் பொறுப்பில் இருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதனை நீங்கள் புரிந்துகொண்டாலே போதும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காகப் பணியாற்றுகின்ற இயக்கம்! ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு பணிகளைச் செய்கிறோம் என்றால், ஆட்சியில் இருந்தால் எவ்வளவுப் பணிகளைச் செய்வோம்

பள்ளிகளும் கேள்விகளும்

படம்
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் வரும் 19ம்தேதி முதல் திறக்கப்படுகிறது, தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என அனைத்து பள்ளி பெற்றோர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 95 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: * பள்ளிகளை திறக்க பெற்றோர் இசைவு தெரிவித்ததாக 95% பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். பெற்றோரிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வரும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.ஒர

ராயபுரம் தொகுதிக்கு அமைச்சர் ஜெயகுமார் செய்தது என்ன?

படம்
ராயபுரத்தில் ஆலடி அருணா பப்ளிக பள்ளியில் திமுக சார்பில் மக்கள் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில ணிகப் பெருமக்கள் இந்தப் பகுதியில் அதிகமாக இருக்கிறார்கள். இந்த ஜி.எஸ்.டி.யால் எவ்வளவு கஷ்டங்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் அந்த ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறோம். ஆனால் அந்த ஜி.எஸ்.டி. தொகையை வாங்கும் மத்திய அரசு, மாநில அரசிற்குக் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். இதுவரைக்கும் வழங்கி இருக்கிறதா என்றால், இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் ஒவ்வொரு முறையும் டெல்லி நோக்கி நமக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி.யை வாங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆனால் இதுவரைக்கும் மத்திய அரசு வழங்கவில்லை. இங்கு ஒரு சகோதரி பேசும் போது, 2004-ம் ஆண்டு சுனாமிக்கு முன்பு மீன்பிடி துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருந்ததையும், சுனாமிக்குப் பிறகு அந்த மைதா

ராயபுரத்தில் இன்று வார்டு சபை : ஸ்டாலின் பங்கேற்கிறார்,

படம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை சென்னையில் வார்டுசபை கூட்டமாக நடைபெறுகிறது. இன்று காலை ராயபுரத்தில் ஆண்டியப்ப கிராமணித்தெருவில் நடைபெறும் வார்டு சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். ராயபுரத்தில் உள்ள ஆலடி அருணா பப்ளிக் ஸ்கூல் நடைபெறும் வார்டு சபை கூட்டத்தில் வடசென்னை வடக்கு மாவட்டத்தின் ராயபுரம் ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்கின்றனர், தொகுதி மற்றும் மகளிர் பிரச்னைகள் குறித்து விரிவான விவாதங்களுக்கு பின்னர் திமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவுருமான ஸ்டாலின் விளக்க உரையாற்றுகிறார், இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளையஅருணா செய்து வருகிறார், ராயபுரம் வரும் திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்க அக்கட்சியை சேர்ந்த முக்கியபிரமுகர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.ஏற்கனவே ராயபுரத்தில் பல்வேறு இடங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடைபெற்றன, வழக்கமாக அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்துடன் கிராமச்சபை கூட்டங்களை நடத்திய திமுக.. ராயபுர

வாய்ஸ் ஆப் ஒபிஎஸ் இபிஎஸ்

படம்
வரும் 27 ம்தேதி சசிகலா பரப்பன அக்ரகாரம் சிறையில் இருந்து விடுவிக்கபாபடுகிறார்.அவர் விடுதலைக்கு பின்னர் அதிமுகவில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதிமுகவில் இரண்டு டஜன் எம்எல்ஏக்கள் சசிகலா காலில் விழ தயாராக இருக்கிறார்கள் என்று பல்வேறு ஹேஷ்யங்கள் சொல்லப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுக்குழுவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதனை முன் மொழிந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இதுவரை எந்த ஒரு ஆளுங்கட்சிக்கும் இப்படி ஒரு நல்வ பேர் கிடைத்ததில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்திருக்கிறது என்று பலமான புகழாரம் சூட்டியுள்ளார் இந்த நிலையில் அதிமுக பொதுக்க்குழுவில் சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது அவரூக்கே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும அதிமுகவில் சிலிப்பர் செல்கள் இல்லையென்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் துனணை ஒருங்கிணைப்பாளராக உள்ள கே.பி.மூனுசாமி முதல்வர் மற்றும் துணைமுதல்வரின் வாய்ஸை தான் கூறியிருக்கிறார் என்று அக்கட்சியின்

ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு அணிகளுக்கு சமமான தொகுதிகள்

படம்
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததில் இருந்தே அக்கட்சியில் பிரச்னைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் பிரசாரத்தை கடந்த 19 ம்தேதி எடப்பாடி தொகுதியில் தொடங்கினார், இதில் துணைமுதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டுக்கு ராயப்பேட்டையில் முதல் பிரசார பொதுக்கூட்டத்தை நடத்தி தீர்வு காணப்பட்டது.மேலும் கூட்டணிக்கட்சிகளில் பாமக , பாஜக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை, இந்த நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான தீர்மானத்தை துணைமுதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் கொண்டு வந்து அது ஏகனமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணியில் உள்ள பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் அதிமுக க

இதோ ஒரு வாரிசு

படம்
அரசியலில் வாரிசுகள் அதிகம் போட்டி போட தேவையில்லை. செல்வாக்கு மிக்க தந்தைகள் இருக்கும்போது மகன்களுக்கு கவலையே இல்லை. ராஜ்யசபாக்களில் நுழையலாம். இளைஞர் அணி செயலாளர் ஆகலாம் ஆனால் சினிமா அப்படி இல்லை. என்பது ஸ்ரீயின் பின்னணியை கேட்டால் தெரியும் மக்களின் பேவரைட் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான ‘யாரடி நீ மோஹினி’ தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீ, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு, பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் பல வருட போராட்டங்களுக்குப் பிறகு சின்னத்திரை உலகில் தனக்கான தனி இடத்தை பிடித்திருப்பவர் தற்போது ‘பேராசை’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். சினிமாவுக்காக பல வருடங்கள் போராடி வெற்றி பெற்ற ஸ்ரீ, நினைத்திருந்தால் ரொம்ப எளிதாக சினிமாவுக்குள் ஹீரோவாக நுழைந்திருக்கலாம். காரணம், , 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் சங்கர்கணேஷின் மகன் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும்தயாரிப்பாளர் ஜி.எல்.வேலுமணியின் பேரன் என்ற அடையாளம் இருந்தும்,

நான் ரெடி நீங்க ரெடியா

படம்
நான் < ரெடி, நீங்கள் ரெடியா?" என்று முதலமைச்சர் எட்ப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆனால் அதனை ஏற்க சில நிபந்தனைகளும் விதித்திருக்கிறார் இது குறித்து அவர் விடுத்திருக்கும் சவால் அறிக்கை * என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?' என்று முதலமைச்சர் பழனிசாமி சவால் - சவடால் விடுத்திருக்கிறார். அந்தச் சவாலை நான் ஏற்கத் தயார். அதற்கு முன்னர் பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, “ சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்” என்று முதலமைச்சர் உத்தரவு வாங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்” என்று ஒரு அமைச்சரவைத் தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி தமிழக ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள். அதே மாதிரி, “வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரு

தியேட்டர்கள் மூடல் அமைச்சர் எச்சரிக்கை

கோவிட் 19 நோய் பரவல் தடுப்பு குறித்த விதிமுறைகளை மீறும் தியேட்டர்களை மூட அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார் கொரானா நோய் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கில் தளர்வுகளை வழங்கியதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டரகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனால் தங்களுக்கு நஷ்டமே அதிகரிக்கும் என்று உரிமையாளரகள் கருதியதால் பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே நடிகர் விஜய் தனது மாஸ்டர் படம் வெளியாவதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யை சந்தித்தார்.100 இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க வேண்டுகோள் விடுத்தார் இதைத்தொடர்ந்து தமிழக அரசு நேற்று அரசானை ஒன்றை வெளியிட்டது. அதில் தியேட்டர் அதிபர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவற்றின் 50 சதவீத இருக்கைகள் 100 சதவீதமாக உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது இது குறித்து எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்த மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாகசீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் இந்த முடிவை தமிழக அரசு தன்னிச்சை

இன் று முதல் கொரோனா தடுப்பூசி

முன்கள பணியாளர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டுகளை அவர் தொடங்கி வைத்து பேசுகையில் தமிழகத்தில் இன்று முதல் கொரோனா நோய் தடுப்பூசி ஒநத்திகையை தொடங்க இருக்கிறோம்.முன்களப்பணியாளர்கள் 27 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கி தடுப்பூசி ஒத்திகையை மேற்கொள்ள இருக்கிறோம்.47 ஆயிரத்து 200 மையங்களில் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் சென்னை திருவள்ளூர் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒத்திகையை நடத்துகிறோம்.17மையங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகைகள் நடைபெறுகின்றன தமிழகத்தில் முழுக்க முழுக்க கட்டணமின்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தடுப்பூசிகளை பாதுகாப்புடன் வைத்திருக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன அதற்கான 47ஆயிரத்து 200 மையங்களை நாங்கள் அடையாளப்படுத்தியுள்ளோம். இரண்டு மணிநேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி வ