புதுமைப்பெண் விருதுகள் : பெண் போலீஸ் அதிகாரி வழங்கினார்,

உலக மகளிர் தினத்தையொட்டி வடசென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி புதுமைப்பெண் விருதுகளை வழங்கினார். ராயபுரம் ரவுண்டப்- மெடிக்கல்லி தமிழன் ஆகிய வாட்ஸ் அப் குழுக்களின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியை மங்கையர்க்கரசி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், மாற்றுத்திறனாளிகளான கோமதி, பச்சையம்மாள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்றுநர் ஹெமில்டா ஆகியோருக்கு துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி புதுமைப்பெண் விருதுகளை வழங்கினார். முன்னதாக எழுத்தாளர் லதா சரவணன் தலைமையில் மகளிர் தின விழாவை பெண்கள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த விழாவில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்த பெண்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையை சேர்ந்த பெண்கள், விழிப்புணர்வூட்டிய பெண் ஊடகவியலாளர்கள், மாநகராட்சி துப்புரவுத்துறையை சேர்ந்த பெண்கள் உள்ளி்டடோருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மெடிக்கல்லி தமிழன் வாட்ஸ் அப் குழு மற்றும் யூடியூப் சானலின் ஆசிரியர் கஸ்துாரி அனைவரையும் வரவேற்று விழா குறித்து சிறப்பாக தொகுத்து வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் எம்.எஸ். அம்பிகா, ஜோதி, புஷ்பா, நுாலகர் கோமதி, வடசென்னை சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ராமலிங்க ஜோதி , வடசெ்ன்னை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ராபர்ட். பென்னி பிஸ்கட் நிறுவனத்தை சேர்ந்த திருப்பதி செல்வி, எல்.செல்வி,அருள்ஜோதி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை, செவிலியர் மார்கிரேட் வசந்தி, வசந்தி யூஜின் உள்ளிட்டோர் பங்கேற்றனர், முடிவில் ப்ரியா ரமேஷ் நன்றி கூறினார்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சசிகலா எந்த டீம்