இலவச லேப்டாப் திட்டம் தொடரும்

அறிமுகமாகிறார் அதிதி இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் திரையுலகில் நுழைந்திருக்கிறார். முத்தையா இயக்கும் விருமன் என்ற படத்தில் கதாநாயகியஆக அறிமுகமாகிறார் அதிதி சங்கர
பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் 2017-18 ம் ஆண்டு பயின்ற பிளஸ் 2;மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி மற்றும் மா. சின்னதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் 2017 -18 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயமுத்தூர், ஈரோடு,காஞ்சிபுரம்,மதுரை, பெரம்பலூர்,சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு இலவச லேப்டாப் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பயின்ற மாணவர்களில் தற்போது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் அத்தாட்சி அடிப்படையில் லேப் டாப் வழங்குவதற்கு அரசாணை பிறபிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆண்டு 11 வகுப்பு பயின்ற 497028 மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய லேப்டாப்கள் இன்னும்கொடுக்கப்படவில்லை. தற்போது 2021-22 ஆம் கல்வியாண்டியில் 11 ம் வகுப்பு தோராயமாக பயின்று வரும் 500000 மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்படவேண்டியுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் வழங்கப்படவேண்டிய நிலுவை 175789 என மொத்தம் 11 லட்சத்து 72 ஆயிரத்து 817 லேப்டாப்கள் வழங்கப்படவேண்டியுள்ளது. தற்போது அனைத்து பணிகளும் முடிப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்குவதற்கு பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.
பெரியார் பிறந்தநாள் சமூக நீதிநாள் *பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்என்றும்*செப்டம்பர் 17இல் தலைமைச் செயலகம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கப்படும்* என்றுமசட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்
வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா இன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டிக்கொண்டாடினர், ராயபுரம் தொகுதி பொருளாளர், வடசென்னை மாவட்ட பொருளாளர் என்று பதவிகளில் இருந்து,படிப்படியாக மாவட்டசெயலாளராக உயர்ந்தவர் இளைய அருணா.அவர் தனது பிறந்தநாளை இன்று காலை ஹாப்பி பாய் பேஸ் டு யூ என்ற பாடலோடு கொண்டாடினார். அவருக்கு எம்எல்ஏக்கள் ஐட்ரீம் இரா.மூர்த்தி, எபினேசர், மாவட்ட பொருளாளர் அருளரசன், வழக்கறிஞர் எல்.முருகவேலு ,உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
எஸ்.கோவிந்தராஜ் காலமானார் வடசென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தின் துணைசெயலாளரும் 24மனை செட்டியார் சங்கத்தின் கெளரவ ஆலோசகருமான எஸ்,கோவிந்தராஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தார் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் மறைந்த அண்ணன் கோவிந்தராஜின் உடல், இன்று மாலை 5 மணிக்கு அவரது இல்லம் அமைந்துள்ள ராயபுரம் கல்மண்டபம் அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள குமாரசாமி தெருவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 5மணிக்கு கோவிந்தராஜ் அவர்களின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காசிமேடு மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன இன்று சட்டபேரவையில் செய்தித்துறை மானியம் தமிழக சட்டபேரவையில் இன்று செய்தித்துறஐ மற்றும் வணிகத்துறை குறித்த மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது,சட்டமன்றத்தேர்தலில் பத்திரிகையாளர்களுக்கு ஆணையம் அமைப்போம் என்ற திமுக வாக்குறுதி,அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் அறிவித்தும் கடைசி வரை நிறைவேற்றாத பத்திரிகையாளர் வாரியம்,உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பத்திரிகை கவுன்சில் ஆககிய பிரச்னைகளுக்கிடையில் செய்தித்துறை மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.இதில், ராயபுரம் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி இன்று பேரவையில் கன்னிப்பேச்சை தொடங்குகிறார். சுமார் எட்டு எம்எல்ஏக்கள்,இத்துறை குறித்துபேசக்கூடும்.பத்திரிகையாளர் ஆணையம் அமைப்பது குறித்து பத்திரிகையாளர் ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவேண்டும் என்றும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசைமாற்று வாரியம் ஆகியவற்றில் பத்திரிகையாளரகளுக்கு உள்ள ஒதுக்கீடு உரிய முறையில் வழங்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இத்துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பத்திரிகையாளர் நலன் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சசிகலா எந்த டீம்