வடசென்னையில் பிரம்மாண்ட நுாலகம் திமுக வாக்குறுதி

தென்சென்னையை போல வடசென்னையிலும் பிரம்மாண்டமான நுாலகம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக 11 1 வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது சென்னை/யில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அக்கட்சியின் சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார், இதில் மாநிலத்தின் நலனுக்காக ஒன்றும் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் என இரண்டு தேர்தல் அறிக்கைகளை அவர் வெளியிட்டார், திமுக இத்தேர்தலில் வேட்பாளர்கள் என்பவர்கள் ஒரு கதாநாயகனாகவும் தேர்தல் அறிக்கை மற்றொரு கதாநாயகனாகவும் திகழ்வதாக ஸ்டாலின் தெரிவித்தார் . மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு தனித்தனியாக தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள,. அதில் சென்னை மாநகருக்கு மட்டும் 111 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன, அந்த வாக்குறுதிகளில் சில சென்னை அண்ணா நகர், தண்டையார் பேட்டை அரசு மருத்துவமனைகளும் புளியந்தோப்பு ஆட்டு்த்தொட்டியும் நவீனப்படுத்தப்படும் என்றும் சென்னையில் டோபிகானாக்கள் மேம்படுத்தப்படும் என்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக்கிடங்கு நகருக்கு வெளியே அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, சென்னையில் சிதைந்து போன குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டித்தரப்படும் என்றும் சென்னை ராயபுரம் வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை போன்ற இடங்களில் டோபிகானாக்கள் அமைக்கப்பட்டு அங்கு பணியாற்றுபவர்களுக்கு குடிசை மாற்று வாரியக்குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும், ஆர்.கே.நகரில் 24 மணிநேரமும் செயல்படும் அரசு மருத்துவமனை கட்டப்படும் என்றும் கிழக்கு ஆர்.கே.நகர் பகுதியில் எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் எவர்சில்வர் பாத்திர உற்பத்திக்காக தனி தொழிற்பேட்டை அமைக்கப்படும் திருவொற்றியூரிலும் தொழிற்பூங்கா அமைக்கப்படும் சென்னையில் மினி பஸ் சேவை மேலும் விரிவுப்படுத்தப்படும் கொளத்துாரில் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திருவொற்றியூரில் அரசு பொறியியல் கல்லுாரி ஆகியவை அமைக்கப்படும், தென் சென்னை கோட்டூர் புரம் அண்ணா நுாற்றாண்டு விழா நுாலகம் போல வடசென்னையிலும் மிகப்பெரிய நுாலகம் கட்டித்தரப்படும், என்றும் தண்டையார்பேட்டையில் மூன்றாவது ரயில் முனையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் திருவொற்றியூரில் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான தொழில்பேட்டை அமைக்கப்படும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கும் பணியை தடுத்து நிறுத்த ஆவன செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுரவாயிலில் அரசு கலை அறிவியல் கல்லுாரி தொடங்கப்படும் என்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி பறவைகள் சரணாலயமாக மேம்படுத்தப்படும், மடிப்பாக்கம் ஏரி வேளச்சேரி ஏரிகள் துாய்மைப்படுத்தப்பட்டு படகு சவாரி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும், எவர்சில்வர் பாத்திர உற்பத்திக்காக தனி தொழிற்பேட்டை அமைக்கப்படும், காய்கறிகளுக்கென கோயம் பேட்டில் சந்தை கட்டப்பட்டதை போல மீன் விற்பனைக்கும் பிரம்மாண்ட சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், செனாய் நகரில் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சசிகலா எந்த டீம்