7 வது முறையாக களம் காணும் அமைச்சர் ஜெயகுமார்

சென்னையில் முதல் தொகுதியாக
கருதப்படும் ராயபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளி்டட 6 பேரை ஜாதகம் பார்த்து முதல் பட்டியலை வெளியிட்டுள்ளதுஅதிமுக . அமைச்சர் ஜெயகுமாருக்கு வயது 62 . கடந்த 1991 ஆம் ஆண்டு ராயபுரம் தொகுதி எம்ஜிஆர் இளைஞரணி தலைவராக இருந்த ஜெயகுமார் , முதன்முதலாக அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்றைய சூழ்நிலையில் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி உடல் சிதறி உயிரிழந்தபோது எழுந்த அலையில் அமைச்சர் ஜெயகுமார் மகத்தான வெற்றி பெற்றார், அதன் பின்னர், கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள்,அனைவரும் தோல்வியை சந்தித்தனர் அமைச்சராக இருந்த ஜெயகுமாரும் தோல்வி அடைந்தார், அதன் பின்னர், ஜெயகுமாரின் அரசியல் வாழ்க்கையில் ஏறுமுகம் தான் 2001 , 2006 , 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் ஜெயகுமார் அடுத்தடுத்து வெற்றி கண்டார், அதிமுக அமைச்சரவையில் , மீன் வளம் பால்வளம் கால்நடைபராமரிப்பு துறை வனத்துறை, மின்துறை, தகவல் தொழில்நுட்பம், சட்டம், என்று மிக முக்கிய துறைகளை வகித்துள்ளார், சபாநாயகராக இருந்த ஜெயகுமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைந்தபோது, நிதியமைச்சரானார், இதன் பின்னர் அதிமுகவில் திருப்புமுனை நிகழ்ந்தது. பிரிந்திருந்த ஒபிஎஸ்- இபிஎஸ் இணைந்தனர்.நிதியமைச்சர் பதவியை இணைப்புக்காக தியாகம் செய்தார் அமைச்சர் ஜெயகுமார் தற்போது மீன்வளத்துறையோடு, அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் சார்ந்த பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராகவும் பணியாற்றுகிறார், அரசியலில் உள்ள தலைவர்கள் பலர் கடும் போட்டிகளை சந்தித்து வரும் நிலையில் அமைச்சர் ஜெயகுமார் மட்டும் பேட்டிகள் நிறைந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார் செய்தியாளர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் சளைக்காமல் பதிலளிக்கிறார், பொதுக்கூட்டங்களை விட தொலைக்காட்சி நேர்காணல்களில் தான் அமைச்சர் ஜெயகுமாரை அதிகம் பார்க்கலாம், ஒரு காலத்தில் கலைஞர் தினமும் காலை மாலை என்று சலிப்பில்லாமல் பத்திரிகையாளர்களை சந்திப்பார் இப்போது அந்த வரிசையில் இப்போது அமைச்சர் ஜெயகுமாரும் இடம் பிடித்துக்கொண்டிருக்கிறார், ஜெயகுமாரின் தாயார் பெயர் ஜெயலட்சுமி, மனைவி ஜெயகுமாரி, மகன்கள் ஜெயசிம்மன், ஜெயவர்த்தன் மகள் ஜெயபிரியா என்று குடும்ப பெயர்களிலும் ஜெயமே . அமைச்சர் ஜெயகுமாரின் தந்தை துரைராஜ், 1968 ஆம் ஆண்டின் அண்ணா காலத்து திமுக கவுன்சிலர், அமைச்சர் ஜெயகுமாரால் ராயபுரத்தை 6 முறை பறி கொடுத்த திமுக இப்போது அவரது பரபரப்பான பேட்டியால் டென்சனாகி இருக்கிறது, கொட்டும் மழையில் திமுக உருவான ராயபுரத்தில் வலுவான வேட்பாளரை நிறுத்தி ஜெயகுமாரை தோற்கடித்தே தீர வேண்டும், என்பதில் தீவிரமாக இருக்கிறது, ஆனால் அமைச்சர் ஜெயகுமார் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை முதல் பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றிருப்பதால் முதல் வெற்றி நமக்கு தான் கிடைக்கும் என்று உற்சாகமாக தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சசிகலா எந்த டீம்