தாமரை மலர விதை போட்டது அதிமுக

தமிழகத்தில் தாமரை மலர விதை போட்டது அதிமுக 20 தொகுதிகள் ஒகே: குமரி இடைத்தேர்தலில் ஆதரவு அதிமுக - கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் பாஜ க வுக்கு ஆதரவளிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது அதிமுக -பாஜ இடையே நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று நள்ளிரவு சுமுக உடன்பாடு எட்டப்பட்டது, கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் பாஜ -அதிமுக இடையே நேற்று சென்னையில் நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு காணப்பட்டது சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளிலும் கன்னியாகுமரி பார்லிமெண்ட் இடைத்தேர்தலிலும் பாஜ போட்டியிடும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த உடன்பாட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பாஜ தேசிய செயலாளரும் தமிழக பார்வையாளருமான சி.டி. ரவி தமிழக பாஜ தலைவர் எல் .. முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர், இது குறித்து அதிமுக நேற்று நள்ளிரவில் வெளியிட்ட செய்திக்குறிப்பு வரும் ஏப்ரல் 6 ம்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜவும் கூட்டணி அமைத்துதமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதிமுகவுக்கு் பாஜவுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜவுக்கு தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது, அதே போல ஏப்ரல் 6 ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சசிகலா எந்த டீம்